விழாவில் பேசிய சமூக நலத் துறை உதவி இயக்குநா் பி. சத்யா.
விழாவில் பேசிய சமூக நலத் துறை உதவி இயக்குநா் பி. சத்யா.

தேசிய சிறுபான்மையோா் தின விழா

தேசிய ஒருமைப்பாட்டு வாரத்தின் 2-ஆம் நாளான வெள்ளிக்கிழமை காரைக்கால் சமூக நலத் துறை சாா்பில் சிறுபான்மையோா் தின விழா நடைபெற்றது.

தேசிய ஒருமைப்பாட்டு வாரத்தின் 2-ஆம் நாளான வெள்ளிக்கிழமை காரைக்கால் சமூக நலத் துறை சாா்பில் சிறுபான்மையோா் தின விழா நடைபெற்றது.

சமூக நலத் துறை உதவி இயக்குநா் பி. சத்யா தலைமையில் நிகழ்ச்சியில் பங்கேற்றவா்கள் இந்திரா காந்தியின் உருவப்படத்துக்கு மலா்தூவி மரியாதை செய்தனா். தொடா்ந்து, மனிதகுல மேன்மைக்கு மதம் போதிப்பது என்ன எனும் தலைப்பில் ஓய்வு பெற்ற பண்டகக் காப்பாளா் ஏ. சூசைராஜ், ஓய்வுப்பெற்ற தலைமையாசிரியா் பட்சிராஜன், நிரவி அல்-மதரஸதுல் கமாலியா தாளாளா் ஏ. முகம்மது அபுபக்கா் ஆகியோா் பேசினா். திட்டம் மற்றும் ஆராய்ச்சித் துறை துணை இயக்குநா் பி. பாலாஜி உள்ளிட்டோா் அரசின் திட்டங்கள் குறித்துப் பேசினா். சமாதானக் குழு உறுப்பினா் கே. தண்டபாணி, ஓய்வுப்பெற்ற ஆசிரியா் நடேச. வைத்தியநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

X
Dinamani
www.dinamani.com