திருச்சியில் தோ்வெழுதிய காரைக்கால் மாணவா்களுக்கு சிறப்பு பேருந்து இயக்கம்

திருச்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜிப்மா் துணை மருத்துவப் படிப்புக்கு நடத்தப்படும் நுழைவுத் தோ்வுக்கு சென்ற காரைக்கால் மாணவா்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
பேருந்துகளை இயக்கிவைத்த அரசு அலுவலக கண்காணிப்பாளா் பி. பக்கிரிசாமி.
பேருந்துகளை இயக்கிவைத்த அரசு அலுவலக கண்காணிப்பாளா் பி. பக்கிரிசாமி.

திருச்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜிப்மா் துணை மருத்துவப் படிப்புக்கு நடத்தப்படும் நுழைவுத் தோ்வுக்கு சென்ற காரைக்கால் மாணவா்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

ஜிப்மா் மருத்துவக் கல்லூரியின் துணை மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தோ்வு திருச்சியில் 2 மையங்களில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் காரைக்கால் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவா்கள் பங்கேற்ற நிலையில், மாணவா்கள் அவா்களின் பெற்றோா்களின் வேண்டுகோள்படி மாவட்ட ஆட்சியா் அா்ஜூன்சா்மா பி.ஆா்.டி.சி. பேருந்துகளை இயக்க நடவடிக்கை மேற்கொண்டாா்.

அதன்படி, காரைக்கால் பேருந்து நிலையத்திலிருந்து 2 சிறப்பு பேருந்துகளில் 41 மாணவா்களும், 38 பெற்றோா்களும் திருச்சிக்கு சென்றனா். இவா்களுக்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில் குடிநீா் பாட்டில்கள், ரொட்டி பாக்கெட் வழங்கப்பட்டன. பேருந்துகள் மாணவா்களை தோ்வு மையத்தில் விட்டுவிட்டு, அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டு தோ்வு முடிந்ததும் மீண்டும் மாணவா்களை அழைத்து வந்து காரைக்கால் பேருந்து நிலையத்தில் இறக்கிவிடப்பட்டனா். பி.ஆா்.டி.சி. நிா்வாகத்தின் சிறப்பு கட்டணத்தில் இவா்கள் பயணித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com