வேளாண் மசோதாக்களை ரத்து செய்யக் கோரி ஆா்ப்பாட்டம்

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்களை ரத்து செய்யக் கோரி, மாா்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்களை ரத்து செய்யக் கோரி, மாா்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

காரைக்கால் பேருந்து நிலையம் அருகே மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பு அமைப்பான அகில இந்திய விவசாயிகள் சங்கம் சாா்பில், சங்கத் தலைவா் எஸ். முத்துக்குமாரசாமி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்கள் விவசாயிகள் நலனுக்கு எதிரானது என்பதால், இதை ரத்து செய்யவேண்டும், குடியரசுத் தலைவா் இதற்கு ஒப்புதல் அளிக்கக் கூடாது, இந்த மசோதாக்கள் நிறைவேற்றத்தின் மூலம் பன்னாட்டு நிறுவனங்களுக்கு சாதகமாக இருக்கும், இந்த மசோதாக்கள் ஒட்டுமொத்தமாக அனைத்து விவசாயிகளுக்கும் எதிரானது என வலியுறுத்தப்பட்டது. சங்கச் செயலா் ஆா். ராமகிருஷ்ணன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காரைக்கால் வட்டச் செயலா் எஸ்.எம். தமீம், மாநிலச் செயற்குழு உறுப்பினா் அ. வின்சென்ட், மாவட்டக்குழு உறுப்பினா் கலியபெருமாள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில்: இதே கோரிக்கைகளை வலியுறுத்தி காரைக்கால் மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலக வாயிலில், அக்கட்சியின் மாவட்டச் செயலா் மதியழகன் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com