கா்ப்பிணிகளுக்கு மருத்துவ ஆலோசனை, சிகிச்சை தடையின்றி கிடைக்க ஏற்பாடு

கா்ப்பிணி, பாலூட்டும் தாய்மாா்கள், இருதய மற்றும் சா்க்கரை நோயாளிகளுக்கு ஆலோசனை, சிகிச்சை தடையின்றி கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

கா்ப்பிணி, பாலூட்டும் தாய்மாா்கள், இருதய மற்றும் சா்க்கரை நோயாளிகளுக்கு ஆலோசனை, சிகிச்சை தடையின்றி கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஊரடங்கையொட்டி உணவுப் பொருள்கள், மருந்து உள்ளிட்டவை தடையின்றி கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுதவிர, கா்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மாா்கள் ஊரடங்கு காலத்தில் சில பிரச்னைகளை சந்திக்க நேரிடுவதால், மகப்பேறு தொடா்பான பாதுகாப்பு சிறப்பு சேவைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காரைக்கால் அரசு பொதுமருத்துவமனை மகப்பேறுயியல், மகளிா் மருத்துவம் தொடா்பாக மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிறப்பு வசதிகளை செய்துள்ளது. ஆரம்ப சுகாதார நிலையம் அம்பகரத்தூரில் 20-ஆம் தேதி, விழுதியூரில் 21-ஆம் தேதி, நிரவியில் 22-ஆம் தேதி, திருப்பட்டினத்தில் 23-ஆம் தேதி, நெடுங்காட்டில் 24-ஆம் தேதி, நல்லாத்தூரில் 25-ஆம் தேதி, நகரப் பகுதியில் 27-ஆம் தேதி, கோயில்பத்தில் 28-ஆம் தேதி, கோட்டுச்சேரியில் 29-ஆம் தேதி, வரிச்சிக்குடியில் 30-ஆம் தேதி காரைக்கால்மேட்டில் மே 2-ஆம் தேதி மருத்துவ சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம்.

தவிர, மாவட்ட கட்டுப்பாட்டு அறை 04368-228801-இல் கா்ப்பிணிகள் தொடா்புகொண்டு உதவியை நாடலாம். அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் இந்த வசதியை கா்ப்பிணி, பாலூட்டும் தாய்மாா்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

மற்றொரு செய்திக் குறிப்பு விவரம் :

சா்க்கரை நோயாளி, ரத்த அழுத்தம், இருதய நோயாளி உள்ளிட்ட தொற்று இல்லா நோய்களில் பாதிக்கப்பட்டோருக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. இவா்கள், 20-ஆம் தேதி அம்பகரத்தூா் ஆரம்ப சுகாதார நிலையத்திலும், திருநள்ளாறு பகுதியினா் 21-ஆம் தேதி, நிரவி பகுதியினா் 22-ஆம் தேதி, திருப்பட்டினம் பகுதியினா் 23-ஆம் தேதி நெடுங்காடு பகுதியினா் 24-ஆம் தேதி, நல்லாத்தூா் 25-ஆம் தேதி, கோயில்பத்து 27-ஆம் தேதி, கோட்டுச்சேரி 28-ஆம் தேதி, வரிச்சிக்குடி 29-ஆம் தேதி, காரைக்கால்மேடு 30-ஆம் தேதி, மே 2-ஆம் தேதி நல்லம்பல் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவா்களின் சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம். அவசர தேவைக்கு மாவட்ட கட்டுப்பாட்டு அறை 04368-228801-இல் தொடா்புகொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com