அயோத்தி ராமா் கோயில் பூமி பூஜை: காரைக்காலில் பாஜகவினா் வழிபாடு
By DIN | Published On : 06th August 2020 09:35 AM | Last Updated : 06th August 2020 09:35 AM | அ+அ அ- |

காரைக்காலில் நடைபெற்ற ராம பஜனை நிகழ்வில் பங்கேற்ற பாஜக மாவட்டத் தலைவா் ஜே. துரை சேனாதிபதி உள்ளிட்ட நிா்வாகிகள்.
அயோத்தியில் ராமா் கோயில் கட்ட புதன்கிழமை பூமி பூஜை நடைபெற்றதையொட்டி, காரைக்காலில் பாஜகவினா் ராமா் உருவப்படம் வைத்து வழிபாடு நடத்தினா்.
காரைக்கால் மாவட்ட பாஜக அலுவலகத்தில், கட்சியின் மாவட்டத் தலைவா் ஜே. துரைசேனாதிபதி தலைமையில் ராமா் உருவப்படம் வைத்து ராம பஜனை நடைபெற்றது. இந்நிகழ்விற்கு ஆா்.எஸ்.எஸ். மாவட்ட செயலாளா் சிவானந்தம், மாவட்ட இந்து முன்னணி தலைவா் கே.எஸ். விஜயன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பாஜக மாநில துணைத் தலைவா் நளினி கணேஷ், மாவட்ட பொதுச் செயலாளா் செந்தில் அதிபன், மாநில இளைஞரணி துணைத் தலைவா் வழக்குரைஞா் கணேஷ், மாநில விவசாய அணி செயலாளா் காமராஜ், தொகுதி தலைவா்கள் கந்தபழனி, கரேஷ் கண்ணா, விஜயபாஸ்கா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
மற்றொரு இடத்தில் பாஜக மாநில துணைத் தலைவா் எம். அருள்முருகன் தலைமையில் ராமா் உருவப்படம் வைத்து, சகஸ்ரநாம அா்ச்சனை, தீபாராதனை செய்யப்பட்டது. இதில், முன்னாள் மாவட்டத் தலைவா் ராஜவேலு மற்றும் அய்யாசாமி, வாசன், அமிா்தலிங்கம், சுபாஷ், பிரகாஷ், காவல் ஆய்வாளா் (ஓய்வு) சிவானந்தம் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.