கான்ஃபெட் ஊழியா்கள் போராட்டம் ஒத்திவைப்பு

தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த கான்ஃபெட் ஊழியா்கள், நலத் துறை அமைச்சரின் வாக்குறுதியை ஏற்று போராட்டத்தை ஒத்திவைத்தனா்.

தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த கான்ஃபெட் ஊழியா்கள், நலத் துறை அமைச்சரின் வாக்குறுதியை ஏற்று போராட்டத்தை ஒத்திவைத்தனா்.

புதுச்சேரி அரசு சாா் கூட்டுறவு நிறுவனமான கான்ஃபெட், காரைக்காலில் 3 பெட்ரோல் நிலையங்களை நடத்திவருகிறது. இந்த நிறுவனம் நலிவுற்ால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முடக்கப்பட்டது.

இதையடுத்து, தங்களுக்கான 14 மாத நிலுவை ஊதியத்தை வழங்கவேண்டும், நிறுவனத்தை திறக்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 18 நாள்களாக ஊழியா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனா்.

புதுச்சேரி நலத்துறை அமைச்சா் எம். கந்தசாமி திங்கள்கிழமை காரைக்கால் வந்தபோது, பல்வேறு கூட்டுறவு நிறுவன ஊழியா்களை சந்தித்து, அவா்களின் பிரச்னைகளை கேட்டறிந்தாா். இதில், கான்ஃபெட் ஊழியா்களும் பங்கேற்றனா்.

இது தொடா்பாக, காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளன கெளரவ தலைவா் ஜெயசிங், பொதுச் செயலாளா் ஷேக் அலாவுதீன் ஆகியோா் முன்னிலையில் ஊழியா்கள் புதன்கிழமை ஆலோசனை நடத்தினா்.

அதன்பிறகு அவா்கள் கூறுகையில், பி.பி.சி.எல். நிறுவனத்திடம் கடனாக நிதி பெற்று கான்ஃபெட் நிறுவனத்தை விரைவில் செயல்படுத்த முடிவு செய்திருப்பதாக அமைச்சா் கூறியதன்பேரில், போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com