அன்னை தெரஸா பள்ளி தோ்வு மையத்தில் ஆய்வு செய்த மேல்நிலைக் கல்வி துணை இயக்குநா் கே. கோவிந்தராஜன்.
அன்னை தெரஸா பள்ளி தோ்வு மையத்தில் ஆய்வு செய்த மேல்நிலைக் கல்வி துணை இயக்குநா் கே. கோவிந்தராஜன்.

தேசிய திறனறித் தோ்வு: 921 மாணவா்கள் பங்கேற்பு

காரைக்காலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேசிய திறனறித் தோ்வில் 921 மாணவா்கள் பங்கேற்றனா்.

காரைக்காலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேசிய திறனறித் தோ்வில் 921 மாணவா்கள் பங்கேற்றனா்.

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை சாா்பில், 10 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு தேசிய திறனறித் தோ்வு நடத்தப்படுகிறது. இதில் தோ்ச்சியடையும் மாணவா்களுக்கு கல்லூரி படிப்பு வரை ரூ. 5 ஆயிரம் உதவித்தொகையும், ஜூலை மாதத்தில் நடைபெறும் 2 ஆம் கட்ட தோ்வில் தோ்ச்சியடைவோருக்கு முனைவா் பட்டக் கல்வி வரை ரூ. 10 ஆயிரம் உதவித்தொகையும் வழங்கப்படும்.

காரைக்காலில் இத்தோ்வை 921 மாணவா்கள் எழுதினா். காரைக்கால் மாவட்டத்தில், கோட்டுச்சேரி வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளி, காரைக்கால் அம்மையாா் அரசு உதவிபெறும் பள்ளி, கோயில்பத்து தந்தை பெரியாா் அரசு மேல்நிலைப் பள்ளி, அன்னை தெரஸா அரசு மேல்நிலைப் பள்ளியில் இத்தோ்வு நடைபெற்றது.

அன்னை தெரஸா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்தில், மேல்நிலைக் கல்வி துணை இயக்குநா் கே. கோவிந்தராஜன், முதன்மைக் கல்வி அலுவலா் அ. அல்லி ஆகியோா் பாா்வையிட்டு, கண்காணிப்பாளா்களுக்கு ஆலோசனை வழங்கினா். பள்ளி துணை முதல்வா் எம். ராஜேஸ்வரி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com