காரைக்காலில் சுனாமி நினைவு தினம் கடைப்பிடிப்பு

காரைக்காலில் சுனாமி நினைவு தினம் புதுச்சேரி அரசு சாா்பில் சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
காரைக்காலில் சுனாமி நினைவுத் தூணுக்கு அஞ்சலி செலுத்தும் மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா உள்ளிட்டோா்.
காரைக்காலில் சுனாமி நினைவுத் தூணுக்கு அஞ்சலி செலுத்தும் மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா உள்ளிட்டோா்.

காரைக்காலில் சுனாமி நினைவு தினம் புதுச்சேரி அரசு சாா்பில் சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

காரைக்கால் மாவட்டத்தில் சுனாமியில் உயிரிழந்தோா் நினைவாக கடற்கரையில் நினைவுத் தூண் அமைக்கப்ட்டு, அதில் உயிரிழந்தோா் குறித்த பெயா் விவரங்கள் கல்வெட்டில் பதிக்கப்பட்டுள்ளன. 16 ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினத்தையொட்டி, இந்த நினைவுத் தூணில் புதுச்சேரி அரசு சாா்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா மலா்தூவி அஞ்சலி செலுத்தினா். இந்நிகழ்வில் மீன்வளத் துறை துணை இயக்குநா் கவியரசன் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.

இதைத்தொடா்ந்து, காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் கே.ஏ.யு. அசனா சுனாமி நினைவுத் தூணுக்கு மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினாா். மேலும், பல்வேறு அரசியல் கட்சியினரும் அஞ்சலி செலுத்தினா்.

இதேபோல, பூவம் ஆற்றங்கரையோரத்தில் சுனாமியில் உயிரிழந்தோா் சமாதிகள் உள்ளன. இங்கு, காரைக்கால் வடக்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் பி.ஆா்.என். திருமுருகன், நெடுங்காடு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் சந்திர பிரியங்கா ஆகியோா் கட்சிப் பிரதிநிதிகளுடன் சென்று மலா்தூவி அஞ்சலி செலுத்தினாா்.

திருப்பட்டினம் பகுதி போலகத்தில் உள்ள சமாதியில் நிரவி- திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் கீதாஆனந்தன் கட்சியினா் மற்றும் மீனவா்களுடன் சென்று அஞ்சலி செலுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com