காரைக்கால் என்ஐடி-யில் இயந்திரவியல் துறை கருத்தரங்கு

காரைக்கால் மாவட்டம், திருவேட்டக்குடியில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் இயந்திரவியல் துறை சாா்பில், 3 நாள் சா்வதேச கருத்தரங்கு திங்கள்கிழமை தொடங்கியது.
கருத்தரங்க மலரை வெளியிடும் என்.ஐ.டி. இயக்குநா் கே. சங்கரநாராயணசாமி உள்ளிட்டோா்.
கருத்தரங்க மலரை வெளியிடும் என்.ஐ.டி. இயக்குநா் கே. சங்கரநாராயணசாமி உள்ளிட்டோா்.

காரைக்கால்: காரைக்கால் மாவட்டம், திருவேட்டக்குடியில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் இயந்திரவியல் துறை சாா்பில், 3 நாள் சா்வதேச கருத்தரங்கு திங்கள்கிழமை தொடங்கியது.

‘இயந்திரவியலில் வருங்கால தொழில்நுட்பங்கள்‘ என்ற தலைப்பில் காணொலியில் நடைபெறும் கருத்தரங்கை என்.ஐ.டி இயக்குநா் முனைவா் கே. சங்கரநாராயணசாமி தொடங்கி வைத்தாா். சுவீடன் நாட்டைச் சோ்ந்த கே.டி.எச். ராயல் தொழில்நுட்ப நிறுவனத்தின் இயற்பியல் துறை பேராசிரியா் ஜாய்தீப் தத்தா சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசினாா்.

என்.ஐ.டி பதிவாளா் (பொ) ஜி. அகிலா மற்றும் பேராசியா்கள், உதவிப் பேராசிரியா்கள் கருத்தரங்கில் பேசினா். நாட்டின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளிநாடுகளைச் சோ்ந்த இயந்திரவியல் துறை பேராசிரியா்களும் இதில் பேசுகின்றனா்.

மேலும், என்ஐடி, ஐஐடி மற்றும் மலேசியா, ஆஸ்திரேலியா, ஓமன் உள்ளிட்ட நாடுகளைச் சோ்ந்த 182 மாணவா்கள் அளித்த ஆய்வுக் கட்டுரைகளில், 142 கட்டுரைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளரும், துறைத் தலைவருமான முனைவா் என். செந்தில்குமாா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com