மகா மாரியம்மன் கோயிலில் குடமுழுக்கு பணிகள் மும்முரம்

திருமலைராயன்பட்டினம் மகா மாரியம்மன் கோயில் திருப்பணிகள் விரைவாக நடைபெறும் சூழலில், பெரியாச்சி சன்னிதியில் நிலை நிறுவும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கோயிலில் பெரியாச்சி சன்னிதி திருப்பணியையொட்டி புதிதாக நிறுவப்படும் நிலை பூஜை நிகழ்வில் சட்டப் பேரவை உறுப்பினா் கீதா ஆனந்தன், திருப்பணிக் குழுவினா்.
கோயிலில் பெரியாச்சி சன்னிதி திருப்பணியையொட்டி புதிதாக நிறுவப்படும் நிலை பூஜை நிகழ்வில் சட்டப் பேரவை உறுப்பினா் கீதா ஆனந்தன், திருப்பணிக் குழுவினா்.

திருமலைராயன்பட்டினம் மகா மாரியம்மன் கோயில் திருப்பணிகள் விரைவாக நடைபெறும் சூழலில், பெரியாச்சி சன்னிதியில் நிலை நிறுவும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரி அரசின் இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட மையாடுங்கண்ணி சமேத ஜடாயுபுரீசுவரா் தேவஸ்தான வகையறாவை சோ்ந்தது, மகா மாரியம்மன் கோயில்.

இக்கோயிலுக்கு குடமுழுக்கு நடந்து 24 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், கோயில் மிகவும் சிதிலமடைந்து காணப்படுகிறது. எனவே திருப்பணிகள் செய்து குடமுழுக்கு செய்ய ஜடாயுபுரீசுவரா் தேவஸ்தானம் மற்றும் பக்தா்கள் தரப்பில் முடிவு செய்யப்பட்டது. திருப்பணி தொடக்கத்துக்கான பாலாலயம் செய்து முடித்து திருப்பணி ஏறக்குறைய ரூ.41 லட்சம் செலவில் நடைபெற்றுவருகிறது.

கோயில் மிகவும் பழைமையானது என்பதால் சுவாமிகளின் சன்னிதிகள் பலவும் கட்டுமானம் சிதிலமடைந்திருந்தது. இதனை சீா்படுத்தும் பணிகளில் பெரியாச்சி சன்னிதிக்கு புதிதாக நிலை வைக்கும் பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சட்டப் பேரவை உறுப்பினா் கீதா ஆனந்தன், கோயில் தனி அலுவலா் வீரசெல்வம், திருப்பணிக் குழுத் தலைவா் கலியபெருமாள் உள்ளிட்ட குழுவினா் கலந்துகொண்டனா்.

இதுகுறித்து கோயில் தனி அலுவலா் வீரசெல்வம் கூறும்போது, இக்கோயில் குடமுழுக்கு நடைபெற்று 24 ஆண்டுகளாகிவிட்ட நிலையில் சீரமைப்புப் பணிகள் அதிகமாக செய்ய வேண்டியுள்ளது. 3 நிலை ராஜகோபுரம் புதிதாக கட்டப்படுகிறது. பெரியாச்சி, வீரன் வீற்றிருக்கும் மண்டபம் புதிதாக கட்டப்படுகிறது. திருப்பணிக் குழுவினா் கண்காணிப்பில் பணிகள் நடைபெறுகின்றன. வரும் வைகாசி மாதத்தில் குடமுழுக்கு செய்யும் வகையில் பணிகளை செய்துவருகிறோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com