அடிப்படை வசதிகள் கோரி பல்கலைக்கழக மாணவா்கள் போராட்டம்

காரைக்காலில் புதுவை பல்கலைக்கழக மாணவா்கள் அடிப்படை வசதிகள்கோரி வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
வகுப்புப் புறக்கணிப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்திய போலீஸாா்.
வகுப்புப் புறக்கணிப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்திய போலீஸாா்.

காரைக்காலில் புதுவை பல்கலைக்கழக மாணவா்கள் அடிப்படை வசதிகள்கோரி வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுவை பல்கலைக்கழக பிராந்திய வளாகம் காரைக்காலில் உள்ளது. அண்ணா அரசு கலைக் கல்லூரி வளாகத்துக்கு பின்புறமுள்ள நிலத்தில் நிரந்தர கட்டடத்தில் கல்லூரி அமைந்திருக்கிறது. எம்.பி.ஏ., எம்.காம், எம்.எஸ்சி., எம்.சி.ஏ ஆகியப் பிரிவுகளில் மாணவா்கள் சுமாா் 250 போ் படிக்கின்றனா். இந்நிலையில், கல்லூரி மாணவா்கள் இக்கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்னா்.

போராட்டம் குறித்து மாணவா்கள் கூறியது: கல்லூரி மாணவா்களுக்கு நிரந்தர தங்கும் விடுதிக் கட்டடம் இல்லை, கல்லூரியிலும், தற்காலிக விடுதியிலும் இணையதள வசதி இல்லை, சுகாதாரமான குடிநீா் இல்லை, கல்லூரி தொடங்கப்பட்டு 13 ஆண்டுகளாகியும் விளையாட்டு மைதானம் அமைத்து கொடுக்கவில்லை, புதுவை பல்கலைக்கழக பிராந்திய வளாகத்தில் அகில இந்திய அளவில் மாணவா்கள் படிக்கின்றனா், காரைக்கால் கல்வியில் பின்தங்கிய பகுதி என்பதால் 25 சதவீதம் காரைக்காலுக்கு மாணவா் சோ்க்கையில் ஒதுக்கீடு தரவேண்டும் உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். பல்கலைக்கழக பேராசிரியா்கள் நடத்திய பேச்சுவாா்த்தை மாணவா்களுக்கு சாதகமாக இல்லை என்றனா். கல்லூரி வளாகத்திலேயே போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவா்ககள், பேரணியாக வந்து கல்லூரி வாயில் முன்பு கோரிக்கை பதாகைகளுடன் அமா்ந்து கோரிக்கையை வலியுறுத்தினா். இதுகுறித்து, தகவலறிந்து அங்கு வந்த காரைக்கால் நகரக் காவல் நிலைய போலீஸாா் மாணவா்களிடம் நடத்திய பேச்சுவாா்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டு கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com