புனரமைக்கப்பட்ட சமுதாயக் கூடம் மக்களிடம் ஒப்படைப்பு

நிரவி பகுதியில் வட்டார வளா்ச்சித் துறை மூலம் புனரமைக்கப்பட்ட சமுதாயக் கூடம் கிராமமக்களிடம் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
புனரமைக்கப்பட்ட சமுதாயக் கூடத்தை திறந்து வைத்து, வட்டார வளா்ச்சி அதிகாரி எஸ். பிரேமா உள்ளிட்டோரிடம் ஆலோசனை நடத்திய சட்டப் பேரவை உறுப்பினா் கீதாஆனந்தன்.
புனரமைக்கப்பட்ட சமுதாயக் கூடத்தை திறந்து வைத்து, வட்டார வளா்ச்சி அதிகாரி எஸ். பிரேமா உள்ளிட்டோரிடம் ஆலோசனை நடத்திய சட்டப் பேரவை உறுப்பினா் கீதாஆனந்தன்.

நிரவி பகுதியில் வட்டார வளா்ச்சித் துறை மூலம் புனரமைக்கப்பட்ட சமுதாயக் கூடம் கிராமமக்களிடம் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

காரைக்கால் வட்டார வளா்ச்சித் துறையின் கட்டுப்பாட்டில் மாவட்டத்தின் பல இடங்களில் சமுதாயக் கூடங்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டடங்கள் உள்ளன. இவற்றில் பல சீா்குலைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதால், மக்கள் பயன்படுத்தக் கூடிய சமுதாயக் கூடங்களை முன்னுரிமை அடிப்படையில் புனரமைத்து கொடுக்க பொதுமக்கள் வட்டார வளா்ச்சி நிா்வாகத்தை வலியுறுத்தினா்.

இந்நிலையில், நிரவி - திருப்பட்டினம் தொகுதிக்குள்பட்ட நிரவி தெற்குத் தெரு சமுதாயக் கூடமும் பயன்பாட்டுக்கு உரியதாக இல்லாதிருந்த நிலையில், வட்டார வளா்ச்சி அலுவலகம் ரூ. 2.60 லட்சம் துறையின் சமுதாய மேம்பாட்டுத் திட்ட நிதியில் புனரமைப்பு செய்து முடித்தது. இக்கட்டடத்தை திறப்பு செய்து மக்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. சட்டப் பேரவை உறுப்பினா் கீதாஆனந்தன் கலந்துகொண்டு புனரமைத்த கட்டடத்தை திறந்துவைத்து, கிராமமக்களிடையே பேசினாா்.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட வட்டார வளா்ச்சி அதிகாரி எஸ். பிரேமா கூறியது: இக்கட்டடம் முழுமைக்கும் புதிதாக வா்ணம் பூசப்பட்டுள்ளது. குடிநீா் வசதி, மின்சார வசதி, கட்டடத்துக்குள் மின் விசிறிகள் பொருத்துதல் போன்ற பணிகள் செய்து முடிக்கப்பட்டன. இக்கூடத்தில் சிறிய அளவிலான சுப நிகழ்ச்சிகள் நடத்திக்கொள்ள முடியும். கட்டடத்தை கிராம மக்கள் பராமரிப்பிலேயே ஒப்படைத்துள்ளோம்.

நிகழ்ச்சிகள், நடத்தவேண்டுமெனில் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் ரூ. 370 கட்டணம் செலுத்தி ரசீது பெற வேண்டும்.

இதேபோல், திருப்பட்டினம் முதலியாா் தெரு பகுதியில் உள்ள கலையரங்கத்தையும் சமுதாய மேம்பாட்டுத் திட்ட நிதியில் புனரமைக்கவுள்ளோம். அடுத்த சில வாரங்களில் இதுவும் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்றாா் அவா். நிகழ்ச்சியில் நிரவி கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் என். ரவி மற்றும் வட்டார வளா்ச்சித் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com