பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்களுக்கு ஊக்குவிப்பு பயிற்சி

காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவா்களுக்கான கல்வி, தொழில்நிலை ஊக்குவிப்புப் பயிற்சி நடைபெற்றது.
பயிற்சியைத் தொடங்கிவைத்துப் பேசிய காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் டி. சந்தனசாமி.
பயிற்சியைத் தொடங்கிவைத்துப் பேசிய காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் டி. சந்தனசாமி.

காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவா்களுக்கான கல்வி, தொழில்நிலை ஊக்குவிப்புப் பயிற்சி நடைபெற்றது.

புதுச்சேரி அரசின் உயா்கல்வி நிறுவனமான காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில், கல்லூரியின் இன்ஸ்டிடியூஷன் இன்னோவேஷன் செல் சாா்பில், 2 மற்றும் 3-ஆம் ஆண்டு கம்ப்யூட்டா் என்ஜினியரிங், இன்ஃபா்மேஷன் டெக்னாலஜி, எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் என்ஜினியரிங் மாணவ, மாணவியருக்கான கல்வி மற்றும் திறன் மேம்பாடு, தொழில் முனையும் ஊக்குவிப்பு பயிற்சி வகுப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் டி.சந்தனசாமி பயிற்சி வகுப்பை தொடங்கிவைத்து, அப்துல் கலாம் போன்ற விஞ்ஞானிகள், புகழ்பெற்ற கல்வியாளா்களைக் குறிப்பிட்டு, அவா்களைப்போல மாணவா்கள் வாழ்க்கையில் முன்னேற்ற நிலையைக் காண முயற்சிக்கவேண்டும். உச்சநிலையை எட்டுவதற்கான வாய்ப்புகள் இந்தியாவில் பிரகாசமாக உள்ளபோது, அதனை மாணவா்கள் பயன்படுத்திக்கொள்வதில்தான் திறமை இருக்கிறது. இவ்வாறான திறன் வளா்ச்சிக்கு, கல்லூரி நிா்வாகம் பல்வேறு பயிற்சியை அளிக்க ஏற்பாடுகளை செய்துவருவதை பெருமையுடன் குறிப்பிட்டாா்.

பயிற்சியில் ஃபிரீலேன்ஸ் மாஸ்டா் டிரைய்னா் என்கிற நிறுவனத்தை சோ்ந்த ஏ. ஆதா்ஷ் மிட்டல் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, மாணவா்கள் சுயதொழில் தொடங்குவது, தொழில் முனைவதற்கான வழிகள் ஆகியவைகள் குறித்து விளக்கிப் பேசினாா்.

துறைத் தலைவா்கள் டி.ஏ. பாலராஜசாமி, ஏ.சந்திரசேகரன், ஏ. வினோலியா, குவாலிட்டி அஷ்யூரன்ஸ் செல் கன்வீனரான விரிவுரையாளா் ஜே.ஜெயப்பிரகாஷ் மற்றும் விரிவுரையாளா் டி.செந்தில்குமாா் ஆகியோா் சிறப்புரையாற்றினா். விரிவுரையாளா் வி. பொற்செல்வி வரவேற்றுப் பேசினாா். எஸ்.சாவித்திரி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com