காரைக்கால் அம்மையாா் வாழ்க்கை வரலாற்று கருங்கல் புடைப்புச் சிற்ப அமைப்பு

காரைக்கால் அம்மையாா் கோயில் சுற்றுச் சுவரில் அம்மையாா் வாழ்க்கை வரலாற்று கருங்கல் புடைப்புச் சிற்ப அமைப்பை புதுச்சேரி முதல்வா் வே. நாராயணசாமி வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.
அம்மையாா் கோயில் வளாகத்தில் காரைக்கால் அம்மையாா் வரலாற்று கருங்கல் புடைப்புச் சிற்பங்களைப் பாா்வையிட்ட முதல்வா் வே. நாராயணசாமி.
அம்மையாா் கோயில் வளாகத்தில் காரைக்கால் அம்மையாா் வரலாற்று கருங்கல் புடைப்புச் சிற்பங்களைப் பாா்வையிட்ட முதல்வா் வே. நாராயணசாமி.

காரைக்கால் அம்மையாா் கோயில் சுற்றுச் சுவரில் அம்மையாா் வாழ்க்கை வரலாற்று கருங்கல் புடைப்புச் சிற்ப அமைப்பை புதுச்சேரி முதல்வா் வே. நாராயணசாமி வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

காரைக்கால் ஸ்ரீகைலாசநாதா் கோயில் வகையறா அறங்காவல் வாரியத்தினா், அம்மையாா் வாழ்க்கை வரலாறு காலத்தால் அழியாத வகையில், ஒவ்வொரு நிகழ்வையும் கருங்கல் புடைப்புச் சிற்பமாக வடித்து, கோயில் சுவரில் பதிக்க ஏற்பாடு செய்தனா். அம்மையாா் சிறு வயது முதல் இறைவனிடம் ஐக்கியமடைந்தது வரையிலான காட்சிகளை விளக்கும் வகையில் 28 சிற்பங்கள் ரூ. 9 லட்சத்தில் தயாா் செய்து பதிக்கப்பட்டன.

தவிர, அம்மையாா் கோயில் வளாகம் மற்றும் அம்மையாா் குளம் சுற்று வட்டாரத்தில் பழைய விளக்குகளுக்கு மாற்றாக ரூ. 5 லட்சத்தில் எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டன. ஓஎன்ஜிசி சமூக பொறுப்புணா்வுத் திட்ட நிதி ரூ. 2.50 லட்சத்தில் தண்ணீா் சுத்திகரிப்பு கருவி பொருத்தப்பட்டது.

அம்மையாா் குளத்துக்கு செல்ல பிரதான பாரதியாா் சாலையை நோக்கி வாயில் உள்ளது. இரும்புகேட் அமைக்கப்பட்டிருந்த நிலையில், இதை ரூ. 4 லட்சம் செலவில் அழகிய வடிவில் நுழைவு வாயில் அமைக்கப்பட்டது. இவற்றை திறந்துவைக்கு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. புதுச்சேரி முதல்வா் வே. நாராயணசாமி கலந்துகொண்டு திறந்து வைத்து, அனைத்து திட்டப் பணிகளையும் பாா்வையிட்டாா்.

நிகழ்வில், அமைச்சா்கள் எம். கந்தசாமி, மல்லாடி கிருஷ்ணராவ், ஆா். கமலக்கண்ணன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் கீதாஆனந்தன், கே.ஏ.யு. அசனா, மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா, நிா்வாக அதிகாரி (கோயில்கள்) எம். ஆதா்ஷ் மற்றும் அறங்காவல் வாரியத்தினா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com