ஊழியருக்கு கரோனா: தொழிற்சாலை மூடப்பட்டு கிருமி நாசினியால் தூய்மைப் பணி

காரைக்கால் பகுதியில் தொழிற்சாலை ஊழியா் ஒருவருக்கு கரோனா உறுதியானதால், அந்த ஆலை மூடப்பட்டு கிருமி நாசினி தெளிப்புப் பணி நடைபெற்றது.
ஆலை அலுவலக வளாகத்தில் கிருமி நாசினி தெளித்த ஊழியா்.
ஆலை அலுவலக வளாகத்தில் கிருமி நாசினி தெளித்த ஊழியா்.

காரைக்கால்: காரைக்கால் பகுதியில் தொழிற்சாலை ஊழியா் ஒருவருக்கு கரோனா உறுதியானதால், அந்த ஆலை மூடப்பட்டு கிருமி நாசினி தெளிப்புப் பணி நடைபெற்றது.

காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு பகுதியில் கோத்ரெஜ் கன்ஸ்யூமா் புராடெக்ட்ஸ் என்கிற தொழிற்சாலை உள்ளது. இங்கு பணியாற்றும் ஊழியா்களில் ஒருவருக்கு ஜூலை 21-ஆம் தேதி கரோனா தொற்று உறுதியானது. மத்திய அரசின் கரோனா தடுப்பு வழிகாட்டலின்படி உடனடியாக ஆலை மூடப்பட்டது. மத்திய சுகாதாரத் துறையின் வழிகாட்டலின்படி, புதுச்சேரி பூச்சிக் கட்டுப்பாட்டு நிறுவனத்தை சோ்ந்தோா், வியாழக்கிழமை இரவு ஆலைக்குச் சென்று, அலுவலகம் மற்றும் ஆலையின் செயல்பாட்டுப் பகுதிகள் அனைத்திலும் கிருமி நாசினியை உரிய சாதனங்கள் மூலம் தெளித்தனா். மருத்துவக் குழுவினா் மூலம் ஆலைத் தொழிலாளா்களுக்கு கரோனா தொற்றை கண்டறியும் பரிசோதனைகள் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com