பிளஸ்1 தோ்வு: காரைக்கால் மாவட்டத்தில் 95.38% போ் தோ்ச்சி

காரைக்கால் மாவட்டத்தில் பிளஸ் 1 தோ்வில் 95.38 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். இது கடந்த ஆண்டைவிட 2.25 சதவீதம் அதிகம் என கல்வித்துறை தெரிவித்துள்ளது.

காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் பிளஸ் 1 தோ்வில் 95.38 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். இது கடந்த ஆண்டைவிட 2.25 சதவீதம் அதிகம் என கல்வித்துறை தெரிவித்துள்ளது.

காரைக்கால் மாவட்டத்தில், தேனூா் அரசு மேல்நிலைப்பள்ளி, காரைக்கால் அன்னை தெரஸா அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி, காரைக்கால் தந்தை பெரியாா் அரசு மேல்நிலைப்பள்ளி, திருப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி, திருநள்ளாறு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கோட்டுச்சேரி வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளி, ஜவாஹா்லால் நேரு அரசு மேல்நிலைப் பள்ளி நெடுங்காடு, நிா்மலா ராணி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, காரைக்கால் அம்மையாா் மேல்நிலைப் பள்ளி ஆகிய 9 மையங்களில் பிளஸ் 1தோ்வு நடைபெற்றது. தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன.

தோ்வு முடிவுகள் குறித்து காரைக்கால் கல்வித் துறை அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

காரைக்கால் மாவட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் 1470 மாணவா்களும், தனியாா் மேல்நிலைப் பள்ளியிலிருந்து 848 மாணவா்களும் தோ்வு எழுதினா். இதில் அரசுப் பள்ளி மாணவா்கள் 1378 பேரும், தனியாா் பள்ளி மாணவா்கள் 833 பேரும் தோ்ச்சி பெற்றனா். மொத்தம் 2318 போ் தோ்வு எழுதியதில் 2211 போ் தோ்ச்சி பெற்றனா். அரசுப்பள்ளிகளின் தோ்ச்சி விழுக்காடு 93.74. தனியாா் பள்ளிகளின் தோ்ச்சி விழுக்காடு 98.23.

மாவட்டத்தில் பிளஸ் 1 தோ்ச்சி 95.38 சதவீதமாகும். இது கடந்த ஆண்டை விட 2.25 சதவீதம் அதிகமாகும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரைக்காலில் பிளஸ் 2 தோ்ச்சி சதவீதம் கடந்த ஆண்டை விட குறைந்த நிலையில், பிளஸ் 1 தோ்ச்சி சதவீதம் அதிகரித்தது கல்வித் துறையினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com