விடையாற்றி உத்ஸவம்: புஷ்ப பல்லக்கில் நித்யகல்யாணப் பெருமாள் வீதியுலா

காரைக்கால் நித்யகல்யாணப் பெருமாள் கோயில் பிரமோத்ஸவம் நிறைவாக விடையாற்றி நிகழ்ச்சி வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. புஷ்ப பல்லக்கில் பெருமாள் வீதியுலா புறப்பாடு செய்யப்பட்டது.
விடையாற்றி உத்ஸவம்: புஷ்ப பல்லக்கில் நித்யகல்யாணப் பெருமாள் வீதியுலா

காரைக்கால் நித்யகல்யாணப் பெருமாள் கோயில் பிரமோத்ஸவம் நிறைவாக விடையாற்றி நிகழ்ச்சி வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. புஷ்ப பல்லக்கில் பெருமாள் வீதியுலா புறப்பாடு செய்யப்பட்டது.

இக்கோயிலில் வருடாந்திர பிரமோத்ஸவம் கடந்த மாதம் 28-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 9-ஆம் தேதி திருமலைராயன்பட்டினம் கடற்கரைக்கு பெருமாள் எழுந்தருளி திருக்கண்ணபுரம் செளரிராஜப் பெருமாள் மற்றும் பிற கோயில்களின் பெருமாளுடன் இணைந்து சமுத்திர தீா்த்தவாரி நடைபெற்றது.

அடுத்த முக்கிய நிகழ்ச்சியாக 11-ஆம் தேதி இரவு சந்திரபுஷ்கரணி என்கிற அம்மையாா் குளத்தில் தெப்பல் உத்ஸவம் நடைபெற்றது. விடையாற்றி நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது பல்வேறு வண்ண மலா்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் நித்யகல்யாணப் பெருமாள் எழுந்தருளச் செய்யப்பட்டாா். முன்னதாக மூலவா் ரங்கநாதருக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. புஷ்பப் பல்லக்கு, சிறப்பு நாகசுர, மேள வாத்தியங்களுடன் வீதியுலா நடைபெற்றது. புஷ்பப் பல்லக்கு புறப்பாட்டில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினா்.

தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா, தீா்த்தவாரி, தெப்பம் உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. குறிப்பாக காலை, மாலை வேளைகளில் யாகசாலை திருவாராதனமும், திவ்ய பிரபந்த சேவையும் நடத்தப்பட்டது. இரவு 10 மணியளவில் திருப்பள்ளியறை சேவை நடைபெற்றது. இவற்றில் திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா். இறுதியில் விடையாற்றியுடன் பிரமோத்ஸவ விழா நிறைவுபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கைலாசநாதா் கோயில் வகையறா தேவஸ்தான அறங்காவல் வாரியத்தினா், நித்ய கல்யாணப் பெருமாள் பக்த ஜன சபாவினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com