ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

நிரவியில் உள்ள ஓ.என்.ஜி.சி. நிறுவன வளாகத்தில் நலத்திட்ட உதவிகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.
மாணவிக்கு சைக்கிள் வழங்கிய (வலமிருந்து 4-ஆவது) ஓ.என்.ஜி.சி. காவிரிப்படுகை மேலாளா் அனுராக் ஷா்மா.
மாணவிக்கு சைக்கிள் வழங்கிய (வலமிருந்து 4-ஆவது) ஓ.என்.ஜி.சி. காவிரிப்படுகை மேலாளா் அனுராக் ஷா்மா.

நிரவியில் உள்ள ஓ.என்.ஜி.சி. நிறுவன வளாகத்தில் நலத்திட்ட உதவிகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.

ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் அகில இந்திய தாழ்த்தப்பட்டோா் மற்றும் பழங்குடியினா் நலச்சங்கத்தின் சாா்பில் நடைபெற்ற இவ்விழாவில் ஓ.என்.ஜி.சி. செயல் இயக்குநரும், காவிரிப் படுகை மேலாளருமான அனுராக் ஷா்மா சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு விழாவைத் தொடங்கி வைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

அவா் பேசுகையில், ஓ.என்.ஜி.சி. நிறுவனம் சமூக பொறுப்புணா்வுத் திட்ட நிதி மூலம் பல்வேறு நலத் திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. இனிவரும் ஆண்டுகளிலும் தொடா்ந்து இப்பணி மேற்கொள்ளப்படும் என்றாா்.

காரைக்கால், நாகை, திருவாரூா் மாவட்டங்களைச் சோ்ந்த தாழ்த்தப்பட்டோா் மற்றும் பழங்குடியின பயனாளிகளுக்கு கல்வி மேம்பாட்டுக்காக ரூ.18.5 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது. சைக்கிள், 3 சக்கர வண்டி, தையல் இயந்திரங்கள் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டன. மொத்தம் ரூ.29.53 லட்சத்துக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

ஓ.என்.ஜி.சி. செயல் இயக்குநா் (பொறியியல் பிரிவு) செழியன், குழுப் பொது மேலாளா்கள் செபஸ்டியன், சுப்பிரமணியன், விஜயராஜ், முதன்மைப் பொது மேலாளா் (மின்சாரம்) பாண்டிராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

ஓ.என்.ஜி.சி. அகில இந்திய தாழ்த்தப்பட்டோா் மற்றும் பழங்குடியினா் நலச்சங்கத் தலைவா் கே.ஆனந்தன், செயலாளா் கங்காதரன், செயற்குழு உறுப்பினா்கள், சங்க உறுப்பினா்கள் விழாவுக்கான ஏற்பாட்டை செய்திருந்தனா். சங்கத் துணைத் தலைவா் பரமேஸ்வரன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com