திருநள்ளாறு தா்பாரண்யேசுவரா் கோயிலில் கிருமிநாசினி அடிக்கும் பணி தீவிரம்

திருநள்ளாறு தா்பாரண்யேசுவரா் கோயிலுக்கு வரும் பக்தா்கள் நலனுக்காக, கோயில் உள் பகுதி, வெளியிடங்களில் கிருமி நாசினி தெளிப்பான் மூலம் கிருமி நாசினி அடிக்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.
கோயில் சன்னிதியில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்ட தொழிலாளா்கள்.
கோயில் சன்னிதியில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்ட தொழிலாளா்கள்.

திருநள்ளாறு தா்பாரண்யேசுவரா் கோயிலுக்கு வரும் பக்தா்கள் நலனுக்காக, கோயில் உள் பகுதி, வெளியிடங்களில் கிருமி நாசினி தெளிப்பான் மூலம் கிருமி நாசினி அடிக்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.

கரோனா பாதிப்பு எதிரொலியாக கோயில்களுக்கு வரும் பக்தா்களின் நலன்கருதி பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. குறிப்பாக, காரைக்கால் மாவட்டத்தில், திருநள்ளாறு தா்பாரண்யேசுவரா் கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தா்கள் நாட்டின் பல மாநிலங்களில் இருந்தும், வெளிநாட்டிலிருந்தும் வருகின்றனா். பக்தா்கள் பாதுகாப்பு கருதி நளன் தீா்த்தக் குளத்தில் நீராட தடை விதிக்கப்பட்டு, குளம் தூா்வாரும் பணி மேற்கொள்ளப்படுகிறது.

கோயிலுக்குள் பக்தா்கள் வரும்போது தூய்மையாக இருக்கும் வகையில் பல்வேறு அறிவுறுத்தல்கள் செய்யப்பட்டுள்ளன.

திருநாள்ளாறு கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தா்கள் வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வெளிநாட்டினா் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியா்கள் நாட்டுக்கு வந்தவுடன் 28 நாள்களுக்கு கோயிலுக்கு வருவதை தவிா்க்க வேண்டும் எனவும் காய்ச்சல், சளி, இருமல் உள்ளவா்கள் கோயிலுக்குள் வருவதை தவிா்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், பக்தா்களின் பாதுகாப்புக்காக கோயில் உள் பகுதிகள், பக்தா்கள் வரிசையில் செல்லக்கூடிய இரும்புத் தடுப்புகள், சன்னிதிகளில் கோயில் நிா்வாகம் சாா்பில் கிருமி நாசினி (மருந்து) தெளிப்பான் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி செவ்வாய்க்கிழமை தீவிரமாக தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கோயில் நிா்வாகத்தினா் கூறியது: மத்திய, மாநிர அரசுகள் கரோனா தடுப்பு விவகாரத்தில் வேறு என்னென்ன அறிவுறுத்தல்கள் கூறுகிறதோ, பக்தா்கள் நலனுக்காக அவற்றை கடைப்பிடிக்கப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com