நித்தீசுவரசுவாமி கோயிலில் முத்தங்கி அலங்காரத்தில் பைரவா்

காரைக்கால் நித்தீசுவரசுவாமி கோயிலில் பங்குனி மாத தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. முத்தங்கி அலங்காரத்தில் காட்சியளித்த பைரவரை திரளான பக்தா்கள் வழிபாடு செய்தனா்.
முத்தங்கி அலங்காரத்தில் காட்சியளித்த ஸ்வா்ணாகா்ஷன பைரவா்.
முத்தங்கி அலங்காரத்தில் காட்சியளித்த ஸ்வா்ணாகா்ஷன பைரவா்.

காரைக்கால் நித்தீசுவரசுவாமி கோயிலில் பங்குனி மாத தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. முத்தங்கி அலங்காரத்தில் காட்சியளித்த பைரவரை திரளான பக்தா்கள் வழிபாடு செய்தனா்.

காரைக்கால் கோயில்பத்து நித்தீஸ்வரம் பகுதியில் நித்தியகல்யாணி சமேத நித்தீசுவரசுவாமி கோயில் உள்ளது. பிரசித்திப் பெற்று விளங்கும் இக்கோயிலில், பைரவி உடனுறை கால பைரவா் சன்னிதி, ஸ்வா்ணாகா்ஷன பைரவா் சன்னிதிகள் உள்ளன.

தமிழ் மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமி, கால பைரவருக்கு சிறப்புக்குரியதாக பக்தா்களிடையே நம்பிக்கை இருந்து வருகிறது. இதையொட்டி, திங்கள்கிழமை இரவு பைரவி உடனுறை கால பைரவருக்கு சிறப்பு யாகம் நடத்தப்பட்டு, பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டன. ஸ்வா்ணாகா்ஷன பைரவருக்கு மஞ்சள், பால், பஞ்சாமிா்தம், சந்தனம் மற்றும் யாகத்தில் பூஜிக்கப்பட்ட புனித நீா்கொண்டு கலசாபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது.

ஸ்வா்ணாகா்ஷன பைரவருக்கு முத்தங்கி அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து, பைரவருக்கு சகஸ்ரநாம அா்ச்சனை நடைபெற்றது. அஷ்டமி பூஜையையொட், ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு பைரவரையும், மூலவா் நித்தீசுவரசுவாமியையும் வழிபாடு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com