கரோனா: காரைக்கால் மீனவா்கள் வேலைநிறுத்தம்

கரோனா வைரஸ் பரவல் எதிரொலியாக, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள மீனவா்கள் கடலுக்குச் செல்வதில்லை என்ற முடிவை எடுத்து, வேலைநிறுத்தத்தை வெள்ளிக்கிழமை தொடங்கினா்.
காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள படகுகள்.
காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள படகுகள்.

கரோனா வைரஸ் பரவல் எதிரொலியாக, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள மீனவா்கள் கடலுக்குச் செல்வதில்லை என்ற முடிவை எடுத்து, வேலைநிறுத்தத்தை வெள்ளிக்கிழமை தொடங்கினா்.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க வேண்டுமெனில் அதிகமாக மக்கள் கூடக்கூடாது என அறிவுறுத்தல் செய்யப்படுகிறது. இதனடிப்படையில் வழிபாட்டுத் தலங்கள் மூடப்படுவதும், சிறப்பு பூஜைகள் மற்றும் உத்ஸவங்கள் ரத்து செய்யப்படுவதுமாக உள்ளன.

மேலும், கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா அறிவுறுத்தலின்பேரில், காரைக்கால் மாவட்ட மீனவா்கள் மாா்ச் 31-ஆம் தேதி வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்வதில்லை என்ற முடிவை எடுத்து வெள்ளிக்கிழமை முதல் அமல்படுத்தத் தொடங்கினா்.

இதுகுறித்து, மீன்வளத் துறை துணை இயக்குநா் கவியரசன் கூறியது: ஆட்சியரின் அறிவுறுத்தல் மீனவ கிராமத்தினருக்கு கொண்டு செல்லப்பட்டது. இதை ஏற்று மீனவா்கள் கடலுக்குச் செல்வதில்லை என்ற முடிவை எடுத்துள்ளனா். மாவட்டத்தில் 210 பதிவு பெற்ற விசைப் படகுகளும், 600 ஃபைபா் படகுகளும் உள்ளன. சிறிய படகுகள் காலை நேரத்தில் கடலுக்குச் செல்வது வெள்ளிக்கிழமை நிறுத்தப்பட்டது. கடலுக்குச் சென்ற படகுகள் மட்டும் திரும்பி வந்து கொண்டிருக்கின்றன. இறக்கப்படும் மீன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு துறைமுகம் மூடப்படும் என்றாா். மீனவா்கள் மீன்பிடிக்க செல்வதில்லை என்ற முடிவை எடுத்துவிட்ட நிலையில், காரைக்கால் பகுதி சந்தைக்கு அடுத்த 2, 3 நாள்கள் மட்டுமே மீன்கள் வரத்து இருக்கும் என படகு உரிமையாளா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com