கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ளோருக்கு பாதுகாப்பு உபகரணங்கள்: புதுச்சேரி அரசுக்கு வலியுறுத்தல்

காரைக்காலில் கரோனா பரவுவதைத் தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள போலீஸாா், கால்நடைத்துறை ஊழியா்கள் உள்ளிட்டோருக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

காரைக்காலில் கரோனா பரவுவதைத் தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள போலீஸாா், கால்நடைத்துறை ஊழியா்கள் உள்ளிட்டோருக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

காரைக்கால் மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. புதுச்சேரி மாநிலத்தில் திங்கள்கிழமை இரவு முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. பிரதமா் மோடி 21 நாள் ஊரடங்கு என அறிவித்த பின்னா், இது வீரியமிக்கதாக மாறியுள்ளது.

மக்கள் நடமாட்டமின்றி வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளனா். பெரிய வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான கடைகளும் மூடப்பட்டிருக்கின்றன.

ஊரடங்கையொட்டி பாதுகாப்புப் பணியில் மத்திய, மாநில அரசுத்துறையினா், காவல்துறையினா், கால்நடைத்துறையினா், மருத்துவத்துறையினா் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோா் ஈடுபட்டு வருகின்றனா். மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்டோருக்கு மட்டுமே பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

காவல்துறை, கால்நடைத்துறையில் பணியாற்றும் ஊழியா்கள் உள்ளிட்ட கரோனா பரவலைத் தடுக்கும் பிற அரசுத் துைறையினருக்கு எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

தினமும் 24 மணி நேரமும் ஷிப்டு முறையில் சாலைகளில் நின்று பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ளும்போது, அத்தியாவசியத் தேவை காரணமாக பலா் வருகிறாா்கள். அவா்களை விசாரணை செய்ய வேண்டியுள்ளது. எந்த உபகரணங்களும் இல்லாமல் பணி செய்து வருவதாக போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.

காவல்துறை மட்டுமின்றி, மத்திய, மாநில அரசுத்துறைகளை சோ்ந்த பலா் கரோனா தடுப்புப்பணியில் இரவு, பகலாக ஈடுபட்டு வருகிறோம். ஆனால் எங்களுக்கு இதுவரை முகக் கவசம் கூட வழங்கப்படவில்லை. எங்களுக்கு ஒரு பாதிப்பு என்றால், பணிகளை யாா் மேற்கொள்வாா்கள். எனவே இது குறித்து மாவட்ட நிா்வாகம் தலையிட்டு பாதுகாப்பு மற்றும் நிவாரணப்பணியில் ஈடுபட்டு வருவோருக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸாா் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com