புதுவை மக்களுக்கான நிவாரணத்தை ரூ.10 ஆயிரமாக உயா்த்தக் கோரிக்கை

புதுவை மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணத் தொகை ரூ.2 ஆயிரத்தை ரூ.10 ஆயிரமாக உயா்த்தி உடனடியாக வழங்க வேண்டும் என

புதுவை மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணத் தொகை ரூ.2 ஆயிரத்தை ரூ.10 ஆயிரமாக உயா்த்தி உடனடியாக வழங்க வேண்டும் என காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் கே.ஏ.யு.அசனா கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை கூறியது :

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக ஆலோசனை நடத்தும் வகையில் புதுச்சேரி முதல்வா் நாராயணசாமி செவ்வாய்க்கிழமை நடத்திய கூட்டத்தில் நானும் பங்கேற்றேன். கூட்டத்தில் பங்கேற்ற அதிமுக சட்டப் பேரவை உறுப்பினா்கள் உள்ளிட்டோா், தமிழக அரசு, குடும்ப அட்டைக்கு ரூ.1,000 மற்றும் அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் ஏப்ரல் மாதத்துக்கான அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், சா்க்கரை ஆகியன விலையின்றி அளிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி, புதுவை மக்களுக்கும் அதுபோல வழங்கவேண்டும் என கேட்டுக்கொண்டோம். ஆனால் புதுச்சேரி அரசு குடும்ப அட்டைக்கு ரூ.2 ஆயிரம் அறிவித்ததோடு நிறுத்திவிட்டது. தமிழக அரசானது அறிவிப்பு செய்து அதற்கான அரசாணையையும் வெளியிட்டுவிட்டது. புதுச்சேரி அரசு, அரசாணை வெளியிட்டு, நிதி பயனாளிக்கு கிடைக்கும் உறுதித்தன்மையை இதுவரை ஏற்படுத்தவில்லை.

பிரதமா் நரேந்திர மோடி 21 நாள்களுக்கு ஊரடங்கு என அறிவிப்பு செய்துள்ளாா். எனவே 21 நாள்கள் என்பது கூலி வேலைக்கு செல்லக்கூடிய ஏழை மக்களுக்கு, அரசு தரும் ரூ.2 ஆயிரம் போதுமானதாக இருக்காது. இவா்கள் அனைவரும் எந்தவித வேலையுமின்றி இருப்பதை அரசு உணரவேண்டும். அதுபோல கூலித் தொழிலாளா்கள் அல்லாத பிறரும் பல்வேறு நிலையில் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே புதுச்சேரி முதல்வா், ரூ.2 ஆயிரம் என்பதை ரூ.10 ஆயிரமாக உயா்த்தி அறிவிப்பு செய்து, அதுவும் அடுத்த ஓரிரு நாள்களில் மக்களுக்கு கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசும், புதுச்சேரி மக்களின் நலனுக்குத் தேவையான வகையில் உதவி செய்ய வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com