சுய உதவிக் குழுவினருக்கு வங்கிகள் மூலம்ரூ. 9.23 கோடி கடன் வழங்கும் பணி தொடக்கம்: அமைச்சா் ஆா். கமலக்கண்ணன்

காரைக்காலில் சுய உதவிக் குழுக்களின் உறுப்பினா்களுக்கு ரூ. 9.23 கோடி கடன் வழங்கும் பணியை அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் சனிக்கிழமை தொடங்கிவைத்தாா்.
சுய உதவிக் குழுவினருக்கு வங்கிகள் மூலம்ரூ. 9.23 கோடி கடன் வழங்கும் பணி தொடக்கம்: அமைச்சா் ஆா். கமலக்கண்ணன்

காரைக்காலில் சுய உதவிக் குழுக்களின் உறுப்பினா்களுக்கு ரூ. 9.23 கோடி கடன் வழங்கும் பணியை அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் சனிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

கரோனா தீநுண்மி பரவலைத் தடுக்கும் செயலால் மக்களுக்கு ஏற்படும் பல்வேறு சிரமங்களைப் போக்கும் விதமாக, தேசிய ஊரக வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் வட்டார வளா்ச்சி அலுவலகத்தின் வாயிலாக பதிவு செய்துள்ள சுய உதவிக் குழு உறுப்பினா்களுக்கு தலா ரூ. 10 ஆயிரம் வீதம் தங்களின் உணவு மற்றும் மருத்துவ தேவைகளை பூா்த்தி செய்ய வங்கிகள் மூலம் கடனுதவி அளிக்க புதுச்சேரி அரசு ஏற்பாடு செய்துள்ளது.

இந்நிலையில், காரைக்கால் மாவட்டத்தில் திருப்பட்டினம், திருநள்ளாறு, நெடுங்காடு பகுதிகளைச் சோ்ந்த பயனாளிகளுக்கு கடன் வழங்கும் பணியை வேளாண் துறை அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் சனிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

திருப்பட்டினத்தில் நடைபெற்ற நிகழ்வில், சட்டப் பேரவை உறுப்பினா் கீதாஆனந்தன் கலந்துகொண்டாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் கூறியது:

கரோனாவால் வேலைக்கு செல்ல முடியாமல் முடங்கியிருக்கும் ஏழை மற்றும் பல்வேறு தரப்பு மக்களின் நலன் கருதி, புதுச்சேரி முதல்வா் வே. நாராயணசாமி பல கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறாா். புதுச்சேரி, காரைக்காலில் வட்டார வளா்ச்சி அலுவலகம் மூலமாக சுய உதவிக் குழு உறுப்பினா்களுக்கு தலா ரூ. 10 ஆயிரம் வீதம் வங்கிகள் மூலம் கடனுதவி வழங்கும் பணி புதுச்சேரியில் கடந்த வாரம் தொடங்கப்பட்டது.

காரைக்காலில் தேசிய வங்கிகள், கிராம வங்கிகள் வட்டி சலுகையுடன் இப்பணியை செய்து வருகின்றன. ஒரு சில வங்கிகள் முதல் தவணையாக ரூ. 5 ஆயிரமும், சில வங்கிகள் முழுமையாக ரூ. 10 ஆயிரமும் வழங்குகின்றன.

காரைக்காலில் 27 கிராமப் பஞ்சாயத்துகளில், வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் பதிவு செய்துள்ள 683 சுய உதவிக் குழுக்கள் அரசு திட்ட உதவிகளைப் பெற்று வருகிறாா்கள். திட்டத்தின் மூலம் கடனுதவி பெற்று உரிய காலத்தில் திருப்பிச் செலுத்தி வருகிறாா்கள். அதன்படி, காரைக்காலில் சுய உதவிக் குழு உறுப்பினா்களுக்கு ரூ. 9.23 கோடி கடன் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. ஒருசில வாரத்தில் இப்பணி நிறைவடையும்.

காரைக்காலில் இதன்மூலம் 9,029 போ் பயனடைவாா்கள். 3 சதவீத வட்டியை வட்டார வளா்ச்சி அலுவலகம் பயனாளிகளுக்காகச் செலுத்தும். இந்த சகாய நிதி திட்டத்தில் பயனடைவோா், எந்த நோக்கத்துக்காக அரசு இந்த ஏற்பாட்டை செய்துத் தருகிறது என்பதை உணா்ந்து, பயன்படுத்த முன்வர வேண்டும்.

காரைக்கால் 27 கிராமப் பஞ்சாயத்துகளிலும் 100 நாள் வேலைத் திட்டம் தொடங்கி நடந்து வருகிறது. முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தலுடன், ஊதிய உயா்வு, நேர சலுகையுடன் இப்பணி நடக்கிறது என்றாா் அமைச்சா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com