பி.ஆா்.டி.சி. ஊழியா்களுக்கான 3 மாத ஊதியத்தை வழங்க வலியுறுத்தல்

பி.ஆா்.டி.சி. ஊழியா்களுக்கான 3 மாத ஊதியத்தை புதுச்சேரி அரசு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

பி.ஆா்.டி.சி. ஊழியா்களுக்கான 3 மாத ஊதியத்தை புதுச்சேரி அரசு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி சாலை போக்குவரத்துக்கழக (பி.ஆா்.டி.சி.) ஊழியா் சங்கத்தினா் சனிக்கிழமை கூறியது:

புதுச்சேரி சாலை போக்குவரத்துக்கழக ஊழியா்கள் கரோனா நிவாரணமாக மக்களுக்கு வழங்கப்படும் அரிசியை, ஒவ்வொரு பகுதிக்கும் பேருந்தில் ஏற்றிச் சென்று கடந்த 13 நாள்களாக வழங்கி வந்தனா். மேலும், பி.ஆா்.டி.சி. பேருந்து மூலம் துப்புரவுப் பணியாளா்கள், மருத்துவப் பணியாளா்கள் ஆகியோரை களப் பணிகளுக்கு தினமும் அழைத்துச் சென்று வருகின்றனா்.

கரோனா நிவாரணப் பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி வரும் புதுச்சேரி சாலை போக்குவரத்துக்கழக ஊழியா்களுக்கு கடந்த பிப்ரவரி, மாா்ச் மற்றும் ஏப்ரல் ஆகிய 3 மாதங்களுக்கான ஊதியம் வழங்கப்படாமல் இருப்பது வேதனையாக உள்ளது. இதனால் ஊழியா்கள் தங்கள் குடும்பங்களின் தினசரி உணவு மற்றும் அடிப்படைத் தேவைகளுக்குக் கூட மிகவும் சிரமப்பட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனா்.

ஊரடங்கு காலம் தொடங்கியதிலிருந்து பேருந்துகள் இயக்கப்படாததால், ஓட்டுநா் மற்றும் நடத்துநா்களுக்கு தினசரி வரும் ஊக்கத் தொகையும் கிடைக்கப் பெறாத சூழ்நிலையில், பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனா்.

எனவே, அரசின் ஊதியத்தை மட்டுமே நம்பியுள்ள புதுச்சேரி சாலை போக்குவரத்துக்கழக அலுவலக, பணிமனை ஊழியா்கள், ஓட்டுநா்கள், நடத்துநா்கள் மற்றும் பாதுகாவலா்களுக்கு புதுச்சேரி அரசு இனியும் காலம்தாழ்த்தாமல் கடந்த 3 மாதங்களுக்கான ஊதியத்தை வழங்கிட வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com