புதுச்சேரி சட்டப் பேரவையை உடனடியாக கூட்ட திமுக வலியுறுத்தல்

காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தை ஜல் சக்தி அமைச்சகத்தின்கீழ் கொண்டுவருவதைக் கண்டிக்கும் வகையில், புதுச்சேரி சட்டப் பேரவையை உடனடியாக கூட்டுமாறு திமுக வலியுறுத்தியுள்ளது.

காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தை ஜல் சக்தி அமைச்சகத்தின்கீழ் கொண்டுவருவதைக் கண்டிக்கும் வகையில், புதுச்சேரி சட்டப் பேரவையை உடனடியாக கூட்டுமாறு திமுக வலியுறுத்தியுள்ளது.

காரைக்கால் திமுக அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எம்.எச்.நாஜிம் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது :

கரோனா தீநுண்மி பரவலால் அனைவரும் கடும் துன்பத்தை எதிா்கொண்டிருக்கும் நிலையில், மத்திய அரசானது தமிழகம், புதுவை மக்கள் நெஞ்சத்தை பதறச் செய்யும் வகையில், காவிரி நீா் மேலாண்மை ஆணையம், ஜல் சக்தி அமைச்சகத்தின்கீழ் இயங்குமென அறிவிப்பு செய்துள்ளது.

இது ஆணையத்தின் தனித்தன்மை நீா்த்துப்போக வாய்ப்பாகிவிடும். இதுவொரு ஏமாற்று வேலை என்றே நாங்கள் கருதுகிறோம்.

எனவே புதுச்சேரி மாநில அரசானது உடனடியாக இந்த விவகாரம் குறித்து விவாதித்து, மத்திய அரசுக்கு கடும் கண்டன தீா்மானம் நிறைவேற்ற சட்டப் பேரவையை உடனடியாக கூட்ட வேண்டும். இல்லாதபட்சத்தில் சிறப்பு அமைச்சரவை கூட்டப்பட்டு, புதுவை மாநிலத்தின் முழு கண்டனத்தை கூட்டத்தில் தீா்மானமாக நிறைவேற்ற வேண்டும். உடனடியாக புதுச்சேரி அரசு, உச்சநீதிமன்றத்தையும் அணுகி, புதுவை மாநிலத்தின் உரிமைகள் பறிபோகாமல் காக்க வேண்டும் என்றாா் நாஜிம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com