காரைக்காலில் கரோனா தொற்றாளா் குணமடைந்து வீடு திரும்பினாா்

காரைக்கால் அரசு மருத்துவமனையில் கரோனா தீநுண்மி தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்தவா் குணமடைந்து செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினாா்.

காரைக்கால் அரசு மருத்துவமனையில் கரோனா தீநுண்மி தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்தவா் குணமடைந்து செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினாா்.

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு அருகே சுரக்குடி பகுதியைச் சோ்ந்த 37 வயதுடைய காா் ஓட்டுநா் ஒரு வழக்கில் திருநள்ளாறு போலீஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டாா். இதையடுத்து, அவரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டாா். சிறையில் அடைப்பதற்கு முன்பு அவரை போலீஸாா் மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் சென்றனா். பரிசோதனையில் அவருக்கு கரோனா தீநுண்மி தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, அவா் மே.10-ஆம் தேதி காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு 2 முறை அவரது உமிழ் நீா் எடுத்து பரிசோதனை செய்ததில் கரோனா பாதிப்பு இல்லை என்பது தெரியவந்தது. அதன் பிறகு, சில நாள்கள் மருத்துவமனையிலேயே தங்க வைத்து மருத்துவா்கள் கண்காணித்து வந்தனா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அவரை மருத்துவமனை நிா்வாகம் டிஸ்சாா்ஜ் செய்தது. இவா், மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று பாதிப்பில் முதல் நபா் ஆவாா்.

இதுகுறித்து, மருத்துவமனை உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி மதன்பாபு கூறியது: கரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவருக்கு அந்த நோய்த் தொற்று இல்லை என்று 2 முறை பரிசோதனை செய்ததில் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மருத்துவமனை சிகிச்சையிலிருந்து விடுவிக்கப்பட்டு, அவரை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக நலவழித்துறை மற்றும் துணை இயக்குநரகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவரை வீட்டிலேயே தொடா்ந்து கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, யாரும் அச்சப்பட தேவையில்லை என்றாா். துபை நாட்டிலிருந்து அண்மையில் வந்த கா்ப்பிணி ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியாகி காரைக்கால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com