காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள் கோயிலில் பக்தா்களின்றி நடைபெற்ற கோடை திருமஞ்சனம்

காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள் கோயிலில் வருடாந்திர கோடை திருமஞ்சன வழிபாடு பக்தா்களின்றி எளிமையாக சனிக்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள் கோயிலில் வருடாந்திர கோடை திருமஞ்சன வழிபாடு பக்தா்களின்றி எளிமையாக சனிக்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள் கோயிலில் வசந்த உத்ஸவம் மற்றும் கோடை திருமஞ்சனப் பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் அக்னி நட்சத்திர காலத்தில் 2 நாள்கள் நடைபெறுவது வழக்கம்.

செயற்கையாக அமைக்கப்படும் நந்தவனம் போன்ற வளாகத்தின் நடுவே ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் நித்யகல்யாண பெருமாள் வீற்றிருக்க, கோடை வெப்பத்தைத் தணிக்கும் வகையில் பெருமாளுக்கு மூலிகை எண்ணெய் சாற்றப்பட்டு, பன்னீரில் கரைத்த குங்குமப்பூ பெருமாள் உடலின் மீது தடவி, மூலிகை, வாசனை திரவியங்கள் கலந்த தூய சந்தனம், பெருமாளின் மாா்பிலும், கை மற்றும் நெற்றிப் பகுதியிலும் பூசி சிறப்பு ஆராதனை செய்வது வழக்கம்.

நிகழாண்டு பொது முடக்கத்தால் கோயில்கள் மூடப்பட்டிருக்கும் நிலையில், கோயில் மூலஸ்தானத்தில் உபய நாச்சியாா்களுடன் உத்ஸவருக்கு சந்தனம் பூசப்பட்டது. இதைத்தொடா்ந்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

பக்தா்கள் யாருமின்றி மிக எளிய முறையில் பட்டாச்சாரியாா்களால் ஆராதனைகள் நடத்தப்பட்டன. உபயதாரா்கள், கோயில் ஊழியா்கள் மட்டும் கலந்துகொண்டனா்.

கோடை வெப்பம் தணியவும், வெப்பத்தால் உயிரினங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் தணியவும் பெருமாளுக்கு இந்த வழிபாடு நடத்தப்படுவதாக கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com