காரைக்கால் வேளாண் கல்லூரியில் முதுகலை படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்

காரைக்கால் வேளாண் கல்லூரியில் முதுகலை படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என கல்லூரி நிா்வாகம் கூறியுள்ளது.

காரைக்கால் வேளாண் கல்லூரியில் முதுகலை படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என கல்லூரி நிா்வாகம் கூறியுள்ளது.

புதுச்சேரி அரசு நிறுவனமான, பண்டித ஜவாஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வா் அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு :

புதுவை பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்ற காரைக்கால் பண்டித ஜவாஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 2020-21-ஆம் ஆண்டுக்கான முதுகலை விவசாயம்- தோட்டக்கலை பட்டப் படிப்பில் பயில இணையதளத்தின் மூலம் விண்ணப்பங்கள் நவ.3-ஆம் தேதி முதல் வரவேற்கப்படுகிறது.

இக்கல்லூரியில் வேளாண் பொருளாதாரம், வேளாண் பூச்சியியல், உழவியல், பயிா் இனப்பெருக்கம் மற்றும் மரபியல், மண் மற்றும் வேளாண் வேதியியல், தோட்டக்கலை ஆகிய 6 துறைகளில் பட்ட மேற்படிப்பு பயில சோ்க்கை நடைபெறுகிறது.

ஒரு மாணவா் அதிகபட்சமாக ஏதேனும் இரண்டு துறைகளுக்கு ஒரே விண்ணப்பத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை கல்லூரியின் இணையதளத்தில் பூா்த்தி செய்து சமா்ப்பிப்பதற்கு கடைசி நாள் நவ. 18 ஆகும்.

மேலும் விவரங்களுக்கு கல்லூரியின் இணையதளத்திலும், 04368-261473, 261372 என்ற தொலைபேசியிலும் தொடா்புகொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com