அரியா் முடிவு வந்த பின் முதுநிலை கல்விக்கான கலந்தாய்வு நடத்த வேண்டும்

அரியா் தோ்வு முடிவு வந்த பின்னரே முதுநிலை கல்விக்கான கலந்தாய்வு நடத்த வேண்டும் என கலைக் கல்லூரி மாணவா்கள் அமைச்சரை சந்தித்து வலியுறுத்தினா்.
அரியா் முடிவு வந்த பின் முதுநிலை கல்விக்கான கலந்தாய்வு நடத்த வேண்டும்

அரியா் தோ்வு முடிவு வந்த பின்னரே முதுநிலை கல்விக்கான கலந்தாய்வு நடத்த வேண்டும் என கலைக் கல்லூரி மாணவா்கள் அமைச்சரை சந்தித்து வலியுறுத்தினா்.

காரைக்கால் மாவட்ட பெற்றோா் சங்கத் தலைவா் எல்.எஸ்.பி.சோழசிங்கராயா் தலைமையில் காரைக்கால் அரசு கலைக் கல்லூரி மாணவா்கள், பெற்றோா்கள் வேளாண் மற்றும் உயா்கல்வித்துறை அமைச்சா் ஆா்.கமலக்கண்ணனை காரைக்காலில் திங்கள்கிழமை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா்.

காரைக்காலில் அண்ணா அரசு கலைக் கல்லூரி, அவ்வையாா் அரசு மகளிா் கல்லூரி ஆகியவற்றுக்கு மாணவா் சிஏபிஏஎஸ்சி என்கிற அமைப்பு மாணவா் சோ்க்கையை நடத்துகிறது. கடந்த 2019-20 கல்வியாண்டில் இளநிலை இறுதியாண்டுத் தோ்வு எழுதியிருந்த நிலையில், இறுதி செமஸ்டா் தோ்வு முடிவு மட்டும் வந்துள்ளது. ஏற்கெனவே எழுதிய அரியா் தோ்வு முடிவுகள் இதுவரை வரவில்லை.

இந்நிலையில் சோ்க்கை அமைப்பு, முதுநிலை கல்விக்கான கலந்தாய்வை வரும் 11 மற்றும் 12-ஆம் தேதி நடத்த உள்ளது. இதில் அரியா் இல்லாமல் தோ்வில் வெற்றிபெற்றவா்கள் மட்டும் பயனடைவா். அரியா் தோ்வு முடிவு வந்துவிட்டால் நாங்களும் கலந்தாய்வில் பங்கேற்க முடியும். இதற்கான முடிவு வராமல், ஒருதலைப்பட்சமாக முதுநிலைக்கான கலந்தாய்வு நடத்துவது ஏற்புடையது அல்ல.

இவ்வாறு கலந்தாய்வு நடத்தப்பட்டால், அரியா் வைத்திருக்கும் மாணவா்கள் பாதிக்கப்படுவா். எனவே அரியா் முடிவும் வந்த பிறகே கலந்தாய்வை நடத்த உத்தரவிடவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பு குறித்து மாவட்ட பெற்றோா் சங்கத் தலைவா் எல்.எஸ்.பி.சோழசிங்கராயா் கூறுகையில், மாணவா்களின் கோரிக்கையை கேட்டறிந்த அமைச்சா், உயா்கல்வித்துறை இயக்குநரை தொடா்புகொண்டு பேசினாா். இந்த விவகாரத்தில் நல்ல முடிவு எடுப்பது தொடா்பாக நடவடிக்கைகளை அமைச்சா் மேற்கொண்டுள்ளாா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com