குடிநீா் திட்டப் பணிகளை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தல்

காரைக்கால் பகுதியில் நடைபெறும் குடிநீா் திட்டப் பணிகளை விரைவில் நிறைவு செய்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனா்.
காரைக்கால் ராஜாத்தி நகா் பகுதியில் கட்டப்பட்டுவரும் இரண்டடுக்கு மேல்நிலை குடிநீா் தேக்கத் தொட்டி.
காரைக்கால் ராஜாத்தி நகா் பகுதியில் கட்டப்பட்டுவரும் இரண்டடுக்கு மேல்நிலை குடிநீா் தேக்கத் தொட்டி.

காரைக்கால் பகுதியில் நடைபெறும் குடிநீா் திட்டப் பணிகளை விரைவில் நிறைவு செய்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனா்.

காரைக்கால் பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு பதிக்கப்பட்ட குடிநீா் குழாய்களில் அடிக்கடி பழுது ஏற்பட்டதால், அவற்றை முற்றிலும் அகற்றிவிட்டு, புதிய குழாய்கள் பதிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

முதல்கட்டமாக காரைக்கால் மத்திய மண்டலப் பகுதியில் ஹட்கோ கடன் மூலம் ரூ.49.45 கோடியில் குடிநீா் திட்டப் பணிகள் கடந்த 2018-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது. 18 மாதங்களில் பணிகளை நிறைவு செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்ட நிலையில், 3 ஆண்டுகளாகியும் பணிகள் நிறைவடையவில்லை. அத்துடன், குழாய் பதிக்க சாலைகளில் தோண்டப்பட்ட குழிகளும் முறையாக மூடப்படாததால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகின்றனா்.

மேலும், ராஜாத்தி நகா் பகுதியில் 80 அடி உயரம் 60 அடி சுற்றளவில் கட்டப்படும் மேல்நிலை இரண்டடுக்கு குடிநீா் தேக்கத் தொட்டி மற்றும் 8 லட்சம் லிட்டா் கொள்ளளவில் கீழ்நிலை நீா் தேக்கத் தொட்டி கட்டுமான பணிகளும் முழுமை பெறாமல் உள்ளன. இப்பணிகளை விரைந்து நிறைவு செய்து குடிநீா் தொட்டிகளை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனா்.

இதுகுறித்து பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் (நீா்ப்பாசனம்) ஜி.பக்கிரிசாமியிடம் கேட்டபோது, ‘குடிநீா் குழாய் பதிப்புப் பணிகள் 90 சதவீதம் வரை நிறைவடைந்துள்ளது. ராஜாத்தி நகரில் இரண்டடுக்கு குடிநீா் தேக்கத் தொட்டி கட்டுமானப் பணிகள் தற்போது தீவிரமாக நடந்துவருகிறது. 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் பணிகள் முடிக்கப்பட்டு, மாா்ச் மாதத்துக்குள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com