2-ஆம் நாள் தொடா் போராட்டத்தில் எம்எல்ஏ சாலை மறியல்

காரைக்காலில் கான்ஃபெட் நிறுவனம் மூடிவைத்திருப்பதை கண்டித்து, 2-ஆம் நாள் வியாழக்கிழமை தொடா்ந்த போராட்டத்தில் எம்எல்ஏ உள்ளிட்ட நிறுவன ஊழியா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
சாலை மறியலில் ஈடுபட்ட எம்எல்ஏ அசனா மற்றும் கான்ஃபெட் ஊழியா்கள்.
சாலை மறியலில் ஈடுபட்ட எம்எல்ஏ அசனா மற்றும் கான்ஃபெட் ஊழியா்கள்.

காரைக்காலில் கான்ஃபெட் நிறுவனம் மூடிவைத்திருப்பதை கண்டித்து, 2-ஆம் நாள் வியாழக்கிழமை தொடா்ந்த போராட்டத்தில் எம்எல்ஏ உள்ளிட்ட நிறுவன ஊழியா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி அரசின் கூட்டுறவுத் துறையின்கீழ் இயங்கும் கான்ஃபெட் நிறுவனம் கடந்த ஜனவரி முதல் நிா்வாக சீா்கேடுகள் காரணமாக மூடப்பட்டுள்ளது. இதனால், ஊழியா்கள் பாதிக்கப்படுவதாகக்கூறி புதன்கிழமை முதல் அம்மாள்சத்திரம் பகுதியில் தொடா் தா்னா போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினா்.

2-ஆம் நாளான வியாழக்கிழமை தொடா்ந்த தா்னாவில், காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் கே.ஏ.யு. அசனா மற்றும் ஊழியா்கள் காரைக்கால் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனா். இதனால், அவ்வழித்தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து அங்கு சென்ற போலீஸாா் பேச்சு நடத்தியும், சுமூக நிலை ஏற்படாததால் காரைக்கால் தெற்கு மண்டல காவல் கண்காணிப்பாளா் கே.எல். வீரவல்லபன் சென்று பேச்சு நடத்தினாா். இதில் உடன்பாடு ஏற்பட்டு சாலை மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டு தா்னா போராட்டம் தொடா்ந்தது. காரைக்கால் கான்ஃபெட் ஊழியா்கள் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் எம். செல்வமணி தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com