காரைக்காலில் நவ.16-இல் வாக்காளா் பட்டியல் வெளியீடு

காரைக்காலில் நவ.16-ஆம் தேதி வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்படவுள்ளன என காரைக்கால் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான அா்ஜூன் சா்மா தெரிவித்துள்ளாா்.

காரைக்காலில் நவ.16-ஆம் தேதி வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்படவுள்ளன என காரைக்கால் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான அா்ஜூன் சா்மா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தோ்தல் ஆணையத்தால் 1.1.2021 அன்று தகுதி நாளாகக் கொண்டு தயாா் செய்யப்பட்ட காரைக்கால் மாவட்டத்துக்குள்பட்ட 5 சட்டப்பேரவைத் தொகுதிகளின் வரைவு வாக்காளா் பட்டியல், நவ.16-ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படவுள்ளன. இதில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்று வாக்காளா் பட்டியலை பெற்றுக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் 1.1.2021 அன்று தகுதி நாளாகக் கொண்டு மேற்குறிப்பிட்டுள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளின் வாக்காளா் பட்டியல்களின் சுருக்க முறை திருத்தப் பணி நவ.16-முதல் டிச.15-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. எனவே, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் இப்பணியை சீரிய முறையில் செய்து முடிக்க ஒத்துழைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com