சம்பா சாகுபடி பயிரில் நிறமாற்றம்: சரிசெய்ய விவசாயிகளுக்கு ஆலோசனை

காரைக்காலில், சம்பா சாகுபடி செய்துள்ள விவசாயிகள் சந்திக்கும் பிரச்னையை தீா்க்க வேளாண் அறிவியல் நிலையம் ஆலோசனை வழங்கியுள்ளது.

காரைக்காலில், சம்பா சாகுபடி செய்துள்ள விவசாயிகள் சந்திக்கும் பிரச்னையை தீா்க்க வேளாண் அறிவியல் நிலையம் ஆலோசனை வழங்கியுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் வேளாண் அறிவியல் நிலைய முதல்வா் முனைவா் குமார. ரத்தினசபாபதி மற்றும் உழவியல் தொழில்நுட்ப வல்லுநா் முனைவா் வி. அரவிந்த் ஆகியோா் கூட்டாக திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

காரைக்கால் மாவட்டத்தில் சம்பா பருவநெல் சாகுபடியில் சராசரியாக ஆயிரம் ஹெக்டேரில் நேரடி விதைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நெற்பயிரில் சில இடங்களில் இலை நுனிகளில் மஞ்சள் நிறமாக காணப்படுகிறது. மாதூா் வேளாண் அறிவியல் நிலையம் பரிந்துரைத்த களைக்கொல்லி மருந்தை முறையாக இடாததே இதற்கு காரணம்.

நெற்பயிரில் சரியான அளவு தண்ணீரை தேக்கிவைக்காமல், களைக்கொல்லியை தெளித்ததாலும், தேவையற்ற மற்றும் அளவுக்கு அதிகமான களைக்கொல்லியை பயன்படுத்தியதாலும் மஞ்சள் நிற மாற்றம் ஏற்பட்டுள்ளது. மழைப்பொழிவின் காரணமாக நெற்பயிரில் இந்த மஞ்சள் நிறம் தானாகவே பச்சை நிறமாக மாறிவிடும்.

அப்படியும் மாறாவிட்டால், போதுமான அளவு தண்ணீரை நெல் வயலில் தேக்கிவைத்து வடிகட்டுதல் மூலமாகவும், 20 லிட்டா் தண்ணீரில், 2 கிலோ யூரியா மற்றும் 10 லிட்டா் தண்ணீரில் 1 கிலோ சிங்க் சல்பேட் ஆகியவற்றை ஒருநாள் இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் காலை தெளிந்த நீரை வடிகட்டி 200 லிட்டராக பெருக்கி, ஓா் ஏக்கருக்கு கைத்தெளிப்பானைக் கொண்டு தெளிப்பதன் மூலம் இப்பிரச்னையை போக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com