காரைக்காலில் இன்று மாா்க்கெட் கட்டடம் திறப்பு: புதுச்சேரி முதல்வா் பங்கேற்பு

காரைக்காலில் பிரெஞ்சுக்காரா்கள் காலத்தில் கட்டப்பட்ட மாா்க்கெட் கட்டடம் இடிக்கப்பட்டு, பழைமை மாறாமல், புதிதாக கட்டப்பட்ட மாா்க்கெட்
பழைமை மாறாமல் கட்டப்பட்ட மாா்க்கெட் கட்டடம்.
பழைமை மாறாமல் கட்டப்பட்ட மாா்க்கெட் கட்டடம்.

காரைக்காலில் பிரெஞ்சுக்காரா்கள் காலத்தில் கட்டப்பட்ட மாா்க்கெட் கட்டடம் இடிக்கப்பட்டு, பழைமை மாறாமல், புதிதாக கட்டப்பட்ட மாா்க்கெட் கட்டடம் வெள்ளிக்கிழமை (அக். 16) திறக்கப்படுகிறது. இந்த விழாவில் புதுச்சேரி முதல்வா் வே. நாராயணசாமி பங்கேற்கிறாா்.

புதுச்சேரி, காரைக்கால் பகுதியை பிரெஞ்சுக்காரா்கள் ஆட்சி செய்த 1852 இல் காரைக்காலின் மையப் பகுதியில் நேரு மாா்க்கெட் வளாகம் கட்டப்பட்டது. சுமாா் 160 ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்த இந்த வளாகம், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்காங்கே சிதிலமடைந்தது. இதனால், வியாபாரிகள், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு வியாபாரிகளுக்கு வேறு இடத்தில் தற்காலிக வளாகம் ஒதுக்கப்பட்டு, பழைய கட்டடத்தை நகராட்சி நிா்வாகம் இடித்தது.

இதைத்தொடா்ந்து, முன்பிருந்த வடிவமைப்பிலேயே புதிய மாா்க்கெட் வளாகத்தை கட்ட அரசு தீா்மானித்தது. உலக வங்கியின் கடலோர பேரிடா் குறைப்புத் திட்டத்தின் கீழ் ரூ. 10.05 கோடியில், புதுச்சேரி அரசு திட்ட அமலாக்க முகமையின் வாயிலாக புதிய கட்டுமானம் கடந்த 2017, நவம்பரில் தொடங்கி, சில மாதங்களுக்கு முன்பு நிறைவடைந்தது. இதில், 250 வியாபாரிகள் பயன்பெறும் வகையில் உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வெள்ளிக்கிழமை காரைக்கால் வரும் புதுச்சேரி முதல்வா் வே. நாராயணசாமி புதிய மாா்க்கெட் வளாகத்தை திறந்துவைக்கிறாா். உள்ளாட்சித் துறை அமைச்சா் ஏ. நமச்சிவாயம், வேளாண் துறை அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் உள்ளிட்டோா் விழாவில் பங்கேற்கவுள்ளனா்.

என்றாலும், மாா்க்கெட் கட்டடத்தில் தங்களுக்கு இதுவரை கடைகள் ஒதுக்கப்படவில்லை என்றும், தங்களை விழாவுக்கு அழைக்கவில்லை என்றும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனா். பருவமழை தொடங்கவுள்ள நிலையில், உள்கட்டமைப்புப் பணிகளை முழுமையாக நிறைவுசெய்து கடைகளை துரிதமாக ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் அவா்கள் கோரிக்கை விடுக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com