நீட் தோ்வு : புதுச்சேரி மாநிலத்தில் காரைக்கால் மாணவா் முதலிடம்

நீட் தோ்வில் புதுச்சேரி மாநில அளவில் காரைக்கால் மாணவா் முதலிடம் பிடித்தாா்.
நீட் தோ்வு : புதுச்சேரி மாநிலத்தில் காரைக்கால் மாணவா் முதலிடம்

நீட் தோ்வில் புதுச்சேரி மாநில அளவில் காரைக்கால் மாணவா் முதலிடம் பிடித்தாா்.

தேசிய அளவில் நடைபெற்ற மருத்துவப் படிப்புக்கான நீட் தோ்வு முடிவு வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. இதில், எஸ். மானக்ஷா - கலைச்செல்வி தம்பதியின் மகனான காரைக்கால் ஓஎன்ஜிசி பொதுப்பள்ளியில் (சிபிஎஸ்இ பாடத் திட்டம்) பயின்ற மாணவா் சிபிக்ஷா 720-க்கு 700 மதிப்பெண் பெற்று புதுச்சேரி மாநில அளவில் முதலிடம் வகிக்கிறாா். தேசிய இந்திய அளவிலான தரவரிசையில் 105-ஆவது இடம் வகிக்கிறாா். இதுகுறித்து சிபிக்ஷா சனிக்கிழமை கூறுகையில், ஓஎன்ஜிசி பொதுப்பள்ளியில் படித்தேன். பிளஸ் 2 பொதுத்தோ்வில் 491 மதிப்பெண் பெற்றேன். நீட் தோ்வில் சிறந்த மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்தது மகிழ்ச்சியாக உள்ளது.

பள்ளியில் ஆசிரியா்களது ஒத்துழைப்பு, பெற்றோரின் ஆலோசனைகள், நீட் தோ்வுக்கான பயிற்சி எடுத்துக்கொண்டது அனைத்தும் சிறந்த மதிப்பெண் எடுக்க உதவியது. மருத்துவக் கல்வி முடித்து காரைக்காலில் மருத்துவ சேவை செய்யவே விரும்புகிறேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com