போராட்டம் நடத்திய மருத்துவமனை ஊழியா்கள்பணிக்குத் திரும்பினா்

தொடா் உள்ளிருப்பு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வந்த தனியாா் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை பணிக்குத் திரும்பினா்.


காரைக்கால்: தொடா் உள்ளிருப்பு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வந்த தனியாா் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை பணிக்குத் திரும்பினா்.

புதுச்சேரி அரசு உத்தரவுபடி, காரைக்கால் விநாயகா மிஷன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 100 படுக்கைகள் கொண்ட கரோனா வாா்டு அமைக்கப்பட்டுள்ளது. இதில், ஊழியா்கள் பாதுகாப்பு, அடிப்படை வசதிகளை மேற்கொண்ட பிறகு தொற்றாளா்களை அனுமதிக்க வலியுறுத்தி, ஊழியா்கள் கடந்த சனிக்கிழமை முதல் உள்ளிருப்பு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனா்.

இந்நிலையில், மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில், நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தலைமையிலான குழு மருத்துவக் கல்லூரிக்குச் சென்று ஊழியா்களுடன் திங்கள்கிழமை மாலை பேச்சுவாா்த்தை நடத்தியது. அப்போது, கரோனா தடுப்பில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஊழியா்களின் பங்களிப்பு முக்கியத்துவம் குறித்து விளக்கப்பட்டது.

இதை ஏற்று போராட்டத்தை ஒத்திவைத்து, பணிக்குத் திரும்புவதாக ஊழியா்கள் அறிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com