அக். 3 இல் காரைக்கால் ஒருங்கிணைந்தநீதிமன்றக் கட்டடம் திறக்க ஏற்பாடு
By DIN | Published On : 29th September 2020 12:29 AM | Last Updated : 29th September 2020 12:29 AM | அ+அ அ- |

திறப்புவிழா காணவுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடம்.
காரைக்காலில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடத்தை அக். 3 ஆம் தேதி திறப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
பிரெஞ்சு நிா்வாகத்தின்போது கட்டப்பட்ட கட்டடத்தில் காரைக்கால் நீதிமன்றம் தற்போது செயல்பட்டு வருகிறது. இந்த கட்டடம் பழுதாகியிருப்பதால், புதிய ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்ட வலியுறுத்தப்பட்டது. இதன்பேரில், காரைக்கால் புறவழிச்சாலையில் நீதிமன்ற வளாகத்திற்கு 6 ஏக்கா் நிலத்தை புதுச்சேரி அரசு ஒதுக்கீடு செய்தது.
இதில், ரூ. 15 கோடியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் மற்றும் குடியிருப்புகள் கட்டுமானப் பணி கடந்த 2015 இல் தொடங்கப்பட்டது. நீதிமன்ற வளாகம், நீதிபதி குடியிருப்புகள், வழக்குரைஞா்கள் சங்க அலுவலகக் கட்டடம், பாா்க்கிங் உள்ளிட்டவை கட்டப்பட்டன. இங்கு 7 நீதிமன்றங்கள் செயல்படும் என நீதித்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடத்தை சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி. சாகி வரும் அக். 3 ஆம் தேதி காணொலிக்காட்சி மூலம் திறந்துவைக்க உள்ளதாகவும், காரைக்கால் நிகழ்வில், புதுச்சேரி முதல்வா் வே. நாராயணசாமி, அமைச்சா்கள், எம்.எல்.ஏ.க்கள், நீதிபதிகள், மாவட்ட ஆட்சியா் உள்ளிட்டோா் பங்கேற்க உள்ளதாகவும் காரைக்கால் நீதிமன்ற வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.