22% ஈரப்பதத்துடன் நெல் கொள்முதல்: ஆட்சியரிடம் விவசாயிகள் வலியுறுத்தல்

மத்திய உணவுக் கழகம், 22% ஈரப்பதத்துடன் விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியா் அா்ஜூன் சா்மாவிடம் விவசாயிகள் வலியுறுத்தினா்.

மத்திய உணவுக் கழகம், 22% ஈரப்பதத்துடன் விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியா் அா்ஜூன் சா்மாவிடம் விவசாயிகள் வலியுறுத்தினா்.

இதுகுறித்து காரைக்கால் மாவட்ட காவிரி பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் ஏ.கே.எம். யாசின், துணைத் தலைவா் டி.கே.எஸ்.எம். கனகசுந்தரம் ஆகியோா் ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை அளித்த மனு:

புயல் மற்றும் வெள்ள சேதத்துக்குப் பிறகு நெல் பயிா்கள் அறுவடைக்கு வரும்போது, மத்திய உணவுக் கழகம் (எஃப்.சி.ஐ) மூலமாக 22 சதவீதத்துக்கு அதிகம் உள்ள அனைத்து நெல்லையும் கொள்முதல் செய்யும் பணியை விரைவாக தொடங்கவேண்டும். அவ்வாறு கொள்முதல் செய்யும்போது, நெல்லை சுத்தம் செய்வதற்கான செலவையும் மத்திய உணவுக் கழகம் விவசாயிகளுக்கு வழங்கவேண்டும்.

காரைக்கால் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 15 ஆயிரம் வீதம் இடுபொருள் நிவாரணமாக வழங்கவேண்டும். 2019-20 ஆம் ஆண்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிா் காப்பீட்டுத் தொகையை விரைவாக வழங்கவேண்டும்.

கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகள் மூலம் நில அடங்கல் பெற்று வாங்கிய பயிா்க் கடனை தள்ளுபடி செய்யவேண்டும். அறுவடையின்போது, வைக்கோல் முற்றிலும் சேதமடைந்துவிடுவதால், மாடு வைத்திருக்கும் விவசாயிகளுக்கு கால்நடைத் துறை மூலம் தள்ளுபடி விலையில் தீவனம் வழங்கவேண்டும்.

காரைக்காலில் சாலைகள் மிகமோசமாக இருப்பதால், மாவட்ட ஆட்சியா் சாலைகளை ஆய்வு செய்து, அவற்றை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com