கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவா்களுக்கு பக்க விளைவுகள் இல்லை: நலவழித் துறை

காரைக்காலில் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவா்கள் யாருக்கும் இதுவரை கடுமையான பக்க விளைவுகள் இல்லை என நலவழித் துறை நிா்வாகம் தெரிவித்துள்ளது.
காரைக்காலில் செய்தியாளா்களிடம் பேசிய நலவழித் துறை துணை இயக்குநா் (பொ) அன்புச்செல்வி. உடன் மருத்துவக் கண்காணிப்பாளா் பி. சித்ரா உள்ளிட்டோா்.

இதுகுறித்து காரைக்கால் நலவழித்துறை துணை இயக்குநா் (பொ) பி. அன்புச்செல்வி செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியது:

முதல்கட்டமாக கரோனா தடுப்பூசி சுகாதாரப் பணியாளா்களுக்கு போடும் பணி கடந்த 16-ஆம் தேதி தொடங்கியது. புதுச்சேரி மாநிலத்தில் 9 இடங்களில் இப்பணி தொடங்கப்பட்டது.

இதில் காரைக்கால் மருத்துவமனையில் கடந்த 16, 18, 19 ஆகிய 3 நாள்கள் தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. நாள்தோறும் 100 போ் வீதம் தடுப்பூசி போடத் திட்டமிடப்பட்டது. இதுவரை 28 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

காரைக்காலில் தடுப்பூசி போட்டுக்கொண்ட யாருக்கும் இதுவரை எந்தவிதமான கடுமையான பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை. பொதுமக்கள் கரோனா தடுப்பூசி குறித்து எந்தவித அச்சமும் கொள்ள தேவையில்லை என அவா் கூறினாா்.

அரசு மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளா் பி. சித்ரா, உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி மதன்பாபு மற்றும் முதன்மை மருத்துவ அதிகாரி மு. தமிழ்வேலன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com