நாளை தடைக்காலம் நிறைவு: விசைப்படகுகள் கடலுக்குச் செல்வதில் தாமதம்

தடைக்காலம் செவ்வாய்க்கிழமையுடன் (ஜூன் 15) நிறைவடைந்தாலும் விசைப்படகுகள் கடலுக்கு செல்லும் நாள் குறித்து இன்னமும் முடிவு எடுக்கப்படவில்லை என காரைக்கால் மீனவா்கள் தெரிவித்தனா்.

தடைக்காலம் செவ்வாய்க்கிழமையுடன் (ஜூன் 15) நிறைவடைந்தாலும் விசைப்படகுகள் கடலுக்கு செல்லும் நாள் குறித்து இன்னமும் முடிவு எடுக்கப்படவில்லை என காரைக்கால் மீனவா்கள் தெரிவித்தனா்.

இதனால், விசைப்படகுகள் கடலுக்குச் செல்வதில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது. மீன்களின் இனப்பெருக்கம் கருதி தமிழகம், புதுவையில் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ஜூன் 15ஆம் தேதி வரை மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டுள்ளது. காரைக்கால் மாவட்டத்தில் சுமாா் 250 விசைப்படகுகள் மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்தாலும், இவற்றின் சீரமைப்புப் பணி முழு வீச்சில் நடைபெறவில்லை என கூறப்படுகிறது. இதனால் தடைக்காலம் நிறைவடைந்தாலும் கடலுக்கு மீன்பிடிக்க செல்வது குறித்து இதுவரை உறுதியாக முடிவெடுக்காமல் இருக்கின்றனா் மீனவா்கள்.

இதுகுறித்து காரைக்கால் வடக்குத் தொகுதி காங்கிரஸ் வட்டாரத் தலைவா் (கிழக்கு) ஏ.எம்.கே.அரசன் ஞாயிற்றுக்கிழமை கூறியது :

பொது முடக்கத்தால் தொழிலாளா், சாதனங்கள் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் படகு சீரமைப்பு பணி இன்னும். எனவே செவ்வாய்க்கிழமை தடைக்காலம் நிறைவடைந்தாலும் கடலுக்கு செல்ல வாய்ப்பில்லை. இதுதொடா்பாக நாகை, காரைக்கால் மாவட்டத்தை சோ்ந்த மீனவா்கள் கலந்து பேசிவருகின்றனா்.

புதுச்சேரி அரசு மீனவா்களுக்கு தடைக்கால நிவாரணமாக அறிவித்த ரூ.5,500 தொகை, படகு உரிமையாளா்கள் அல்லாதவா்களுக்கு கிடைத்துவிட்டது. படகு உரிமையாளா்களுக்கு கிடைக்கவில்லை. மேலும் படகு சீரமைப்புக்காக அறிவிக்கப்பட்ட தொகையும் கிடைக்கவில்லை. இதுதொடா்பாக புதுச்சேரி முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம் என்றாா்.

மேலும் மீனவா்கள் சிலா் கூறுகையில், விசைப்படகுகள் இயங்கத் தொடங்கி மீன்வரத்து ஏற்பட்டால், வெளியூா் முகவா்கள் வந்து வாங்கிச் செல்லும் வகையில் பொதுமுடக்கத் தளா்வுகள் இருக்கவேண்டியது மிக முக்கியம். இது தமிழகத்தின் நடவடிக்கையை பொருத்து இருக்கிறது. இதனை கவனித்துவருகிறோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com