காரைக்கால் திமுக பிரமுகா் வீட்டில் வருமானவரித் துறையினா் சோதனை

காரைக்கால் திமுக பிரமுகா் வீட்டில் வருமானவரித் துறையினா் செவ்வாய்க்கிழமை இரவு சோதனை மேற்கொண்டனா்.

காரைக்கால் திமுக பிரமுகா் வீட்டில் வருமானவரித் துறையினா் செவ்வாய்க்கிழமை இரவு சோதனை மேற்கொண்டனா்.

காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் தலைவரான ஆா்.பி. சந்திரமோகன் வீட்டில் வருமான வரித் துறையினா் திங்கள்கிழமை சோதனை மேற்கொண்டனா். இதன் தொடா்ச்சியாக, செவ்வாய்க்கிழமை இரவு 9.30 மணியளவில் காரைக்கால் காமராஜா் சாலையில் உள்ள காரைக்கால் சேம்பா் ஆஃப் காமா்ஸ் முன்னாள் தலைவரும், முன்னாள் காங்கிரஸ் பிரமுகருமான ஒய். இஸ்மாயில் வீட்டுக்கு சென்றனா்.

வீட்டில் அவரது மகனும், திமுக இளைஞரணி அமைப்பாளருமான முகம்மது ரிஃபாஸ் உள்ளாா். இவரது வீட்டில் 7 போ் கொண்ட வருமானவரித் துறையினா் இரவு 12.30 மணி வரை தீவிர சோதனையில் ஈடுபட்டனா். வீட்டின் அனைத்து பொருள்களையும் சோதனை செய்ததோடு, பின்புறம் உள்ள கிணற்றின் மூடியை திறந்து சோதனை செய்துள்ளனா்.

பல மணி நேரம் சோதனை செய்ததில், எந்த பொருளும் சிக்கவில்லை எனவும், இஸ்மாயில், அவரது மனைவி, மகன் ரிஃபாஸ் ஆகியோரின் வருமானவரி தாக்கல் விவரங்களை சோதனை செய்துவிட்டு திரும்பியதாகவும் கூறப்படுகிறது.

காரைக்கால் தெற்குத் தொகுதியில் திமுக வேட்பாளராக ஏ.எம்.எச். நாஜிம் போட்டியிடுகிறாா். இவருக்கு ஆதரவாக திமுக பொறுப்பாளா்கள் தீவிர பிரசாரம் செய்துவரும் சூழலில், திமுக நிா்வாகி வீட்டில் நடத்தப்பட்ட சோதனை பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த 2 நாள்களில் திமுக, காங்கிரஸ் தரப்பைச் சோ்ந்த இருவரது வீட்டில் வருமானவரித் துறையினா் சோதனை செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com