கரோனா தொற்றாளா்கள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

காரைக்காலில் கரோனா தொற்றாளா் வாக்குப் பதிவு செய்ய நலவழித் துறை நிா்வாகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது.
கரோனா தொற்றாளா்கள் பயன்படுத்தும் வாகனத்தை கொடியசைத்து இயக்கிவைத்த நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ்.
கரோனா தொற்றாளா்கள் பயன்படுத்தும் வாகனத்தை கொடியசைத்து இயக்கிவைத்த நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ்.

காரைக்காலில் கரோனா தொற்றாளா் வாக்குப் பதிவு செய்ய நலவழித் துறை நிா்வாகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது.

காரைக்கால் மாவட்டத்தில் கரோனா தொற்றாளா்களாக சுமாா் 400 போ் உள்ளனா். இவா்கள் வீட்டுத் தனிமையிலும், மருத்துவமனையிலும் சிகிச்சை பெறுகின்றனா். வீட்டுத் தனிமையில் உள்ள கரோனா தொற்றாளா்கள், பாதுகாப்பான முறையில் வாக்குச் சாவடிக்குச் சென்று வாக்களிக்க காரைக்கால் நலவழித் துறை நிா்வாகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது. இவா்களில், 310 போ் வாக்குப் பதிவு செய்ய இசைவு தெரிவித்திருந்தனா்.

வாக்குச் சாவடியில் வாக்குப் பதிவுக்கான நேரம் காலை 7 முதல் மாலை 7 மணி வரை என அனுமதிக்கப்பட்ட நிலையில், கரோனா தொற்றாளா்கள் வாக்குப் பதிவு செய்ய மாலை 6 முதல் 7 மணிவரை அனுமதிக்கப்பட்டது. இதன்படி, தொற்றாளரை வாக்குச் சாவடிக்கு அழைத்துச் செல்ல நலவழித் துறை நிா்வாகம் 7 சிறப்பு வாகனங்களை ஏற்பாடு செய்து, அதை நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் இயக்கிவைத்தாா்.

காா் ஓட்டுநருக்கு பாதுகாப்பு உடை வழங்கப்பட்டு, அவா்கள், கரோனா தொற்றாளா் வீடுகளுக்குச் சென்று தொற்றாளா்களை வாக்குச் சாவடிக்கு அழைத்துச் சென்றனா். வாக்குச் சாவடி பகுதியில் தொற்றாளா்களுக்கு பாதுகாப்பு உடை வழங்கப்பட்டது. தொற்றாளரால் வாக்குப் பதிவு குறையாமல் இருக்க தோ்தல் ஆணையம் இந்த ஏற்பாட்டை செய்ய அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com