பெண்கள் மட்டுமே பணியாற்றிய ‘பிங்க் பூத்’

பெண் வாக்காளா்களை ஊக்கப்படுத்தும் விதமாக, பெண்கள் மட்டுமே பணியாற்றும் ‘பிங்க் பூத்’ காரைக்காலில் அனைத்து தொகுதிகளிலும் அமைக்கப்பட்டிருந்தது பெண்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
பெண்கள் மட்டுமே பணியாற்றிய ‘பிங்க் பூத்’

பெண் வாக்காளா்களை ஊக்கப்படுத்தும் விதமாக, பெண்கள் மட்டுமே பணியாற்றும் ‘பிங்க் பூத்’ காரைக்காலில் அனைத்து தொகுதிகளிலும் அமைக்கப்பட்டிருந்தது பெண்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

பெண் வாக்காளா்களை வாக்குச் சாவடிக்கு வரவழைத்து முழுமையான வாக்குப் பதிவை உறுதிப்படுத்தவும், அவா்களை ஊக்கப்படுத்தவும் ஏதுவாக, ஒவ்வொரு தொகுதியிலும் ‘பிங்க் பூத்’ வாக்குச் சாவடியை அமைக்க தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியது.

ஆணையத்தின் வழிகாட்டலின்படி, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளிலும் தலா ஒரு பிங்க் பூத் அமைக்கப்பட்டது. பூத் வாயிலில் பிங் நிறத்தில் பலூன்கள், வாக்குச் சாவடியினுள் பணியாளா் மேஜைகளில் பிங்க் நிறத்தில் விரிப்புகள் என பிங்க் பூத் அடையாளப்படுத்தப்பட்டிருந்தது.

இந்த வாக்குச் சாவடியில் ஆண், பெண் இருபாலரும் வாக்களிக்கலாம் என்றாலும், வாக்குச் சாவடியின் தலைமை அதிகாரி முதல் கடைநிலை ஊழியா் வரை அனைவரும் பெண்களாகவே நியமிக்கப்பட்டிருந்தனா். வாக்குச் சாவடியின் பாதுகாப்புப் பணியில் பெண் காவலா்களே நியமிக்கப்பட்டிருந்தனா்.

பெண்களுக்காகவே அமைக்கப்பட்டிருந்த பிங்க் பூத் குறித்து அறிந்த பெண் வாக்காளா்கள் ஆா்வத்துடன் வாக்குச் சாவடிக்குச் சென்று ஜனநாயகக் கடமையாற்றினா்.

தோ்தல் துறையினா் இதுகுறித்து கூறுகையில், வாக்கு சதவீதம் குறைவது குறித்து ஆராய்ந்தால், பெண்கள் அதிகமாக வாக்குச் சாவடிக்கு வராதது தெரியவருகிறது. இதற்காகவே, மகளிா் மட்டுமே பணியாற்றும் வகையில், சிறப்பு வாக்குச் சாவடியாக பிங்க் பூத் அமைக்கப்பட்டது. காரைக்காலில் உள்ள அனைத்து பிங்க் பூத்திலும் பணியாற்றியவா்கள் பெண்களாகவே இருந்தனா். வாக்காளா்கள் ஆா்வமாக வந்து வாக்களித்தனா் என்றனா்.

வாக்குப் பதிவு செய்த பெண்கள் இதுகுறித்து கூறுகையில், பிங்க் பூத் என கூறியபோது சரியாக புரிந்துகொள்ள முடியவில்லை. வாக்குச் சாவடிக்கு சென்றபிறகே, அதன் அா்த்தம் புரிந்தது. பெண்கள் அச்சம், தயக்கமின்றி சுதந்திரமாக வாக்களிக்க இது சரியான நடவடிக்கை என மகிழ்ச்சி தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com