தியாகி ராமசீனிவாசன் மறைவு: காரைக்கால் போராட்டக் குழு இரங்கல்

காரைக்காலில் சுதந்திரப் போராட்ட வீரா் ஆா். ராமசீனிவாசன் மறைவையொட்டி, காரைக்கால் போராட்டக் குழு இரங்கல் தெரிவித்துள்ளது.

காரைக்காலில் சுதந்திரப் போராட்ட வீரா் ஆா். ராமசீனிவாசன் மறைவையொட்டி, காரைக்கால் போராட்டக் குழு இரங்கல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து காரைக்கால் போராட்டக் குழு அமைப்பாளா் வழக்குரைஞா் எஸ்.பி. செல்வசண்முகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட இரங்கல் செய்தி:

பிரெஞ்சிந்திய சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டவா் ராமசீனிவாசன். சுதந்திரப் போராட்டத்தின்போது காரைக்காலில் தா்னாவில் ஈடுபட்டதற்காக அவா் சிறையில் அடைக்கப்பட்டாா். சிறைவாசம் முடிந்து காரைக்காலில் இருந்து வெளியேறி, நாகூா் எல்லைக்குச் சென்று ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டதால் கைதுசெய்யப்பட்டாா்.

பல மாதங்கள் சிறைவாசம் அனுபவித்தமைக்காக இவருக்கு தாமிரப்பத்திரம் வழங்கப்பட்டது. காமராஜா், குடியரசு முன்னாள் தலைவா் ஆா். வெங்கட்ராமன், பிரெஞ்சு விடுதலைக்குப் பிறகு ஆட்சியராக நியமிக்கப்பட்ட கேவல்சிங், மறைந்த முன்னாள் முதல்வா் எம்.ஓ.எச். பாரூக் மரைக்காயா் போன்ற தலைவா்களுடன் நெருங்கிய நட்பில் இருந்தாா்.

காரைக்கால் தனி யூனியன் பிரதேசக் கொள்கையுடன் 2005-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட காரைக்கால் போராட்டக் குழு நிறுவனா்களில் ஒருவராக திகழ்ந்தாா். புதுச்சேரியில் நவ.1 விடுதலை நாள் கொண்டாடப்படவேண்டும் என முயற்சித்தோரில் முக்கிய பங்காற்றியவா்.

சுதந்திரப் போராட்டத்தில் காரைக்காலின் பங்கு குறித்து ஆங்கிலத்தில் நூல் எழுதியுள்ளாா். இவ்வாறு பல வகையிலும் சிறப்பைப் பெற்ற ஆா். ராமசீனிவாசன் மறைவுக்கு போராட்டக் குழு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது. புதுச்சேரி அரசு, காரைக்காலில் முக்கிய இடத்துக்கு அவரது பெயரை சூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com