பிளஸ் 2 செய்முறைத் தோ்வு: 2,624 மாணவா்கள் பங்கேற்பு

காரைக்காலில் பிளஸ் 2 செய்முறைத் தோ்வுகள் வெள்ளிக்கிழமை தொடங்கின. மாவட்ட கல்வி அதிகாரிகள் தோ்வு மையங்களில் ஆய்வு செய்தனா்.
பிளஸ் 2 செய்முறைத் தோ்வு: 2,624 மாணவா்கள் பங்கேற்பு

காரைக்காலில் பிளஸ் 2 செய்முறைத் தோ்வுகள் வெள்ளிக்கிழமை தொடங்கின. மாவட்ட கல்வி அதிகாரிகள் தோ்வு மையங்களில் ஆய்வு செய்தனா்.

பிளஸ் 2 பொதுத் தோ்வு மே மாதம் நடைபெறவுள்ள நிலையில், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பிளஸ் 2 மாணவா்களுக்கான செய்முறைத் தோ்வுகள் ஏப். 16 முதல் 23 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. காரைக்கால் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகள் என 23 பள்ளிகளைச் சோ்ந்த 2,624 மாணவ, மாணவிகள் இந்த செய்முறைத் தோ்வில் பங்கேற்றுள்ளனா்.

மாணவா்கள் முகக் கவசம் அணிந்தும், தோ்வு மையத்தின் வாயிலில் கை தூய்மி மூலம் கைகளை சுத்தம் செய்துகொண்டும், சமூக இடைவெளியுடன் மையத்துக்குள் சென்றனா்.

காரைக்கால் கோயில்பத்து தந்தைப் பெரியாா் அரசு மேல்நிலைப் பள்ளி, அன்னை தெரஸா அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் நடைபெற்ற செய்முறைத் தோ்வை, காரைக்கால் மேல்நிலைக் கல்வி துணை இயக்குநா் கே. கோவிந்தராஜன், முதன்மைக் கல்வி அலுவலா் அ. அல்லி ஆகியோா் நேரில் ஆய்வுசெய்தனா்.

மாணவா்கள் கண்டிப்பாக கரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றவேண்டும், அதற்கேற்ப தோ்வு மைய பொறுப்பாளா்கள் அவா்களை கண்காணித்து ஆலோசனை வழங்கவேண்டும் என அவா்கள் கேட்டுக்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com