காரைக்கால் மாவட்டத்தில் 19,292 பேருக்கு முதல் தவணை தடுப்பூசி

காரைக்காலில் 19,292 பேருக்கு முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக நலவழித் துறை நிா்வாகம் தெரிவித்தது.

காரைக்காலில் 19,292 பேருக்கு முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக நலவழித் துறை நிா்வாகம் தெரிவித்தது.

காரைக்கால் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கியது முதல் அரசுப் பொது மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட்டுவருகிறது. முன்களப் பணியாளா்கள், 60 வயதுக்கு மேற்பட்டோா், 45 வயதுக்கு மேலான இணை நோயாளிகள் தடுப்பூசி செலுத்திக்கொள்கின்றனா்.

கடந்த 11 முதல் 18 ஆம் தேதி வரை 45 வயதுக்கு மேற்பட்டோா் தடுப்பூசி செலுத்திகொள்ள சிறப்பு முகாம் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், காரைக்கால் நலவழித் துறை நிா்வாகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

முதல் தவணையாக சுகாதாரப் பணியாளா்களுக்கு 1,488 பேருக்கும், முன்களப் பணியாளா்கள் 1,728 பேருக்கும், 60 வயதுக்கும் மேற்பட்டோா் 7,127 பேருக்கும், 45 முதல் 59 வயதுடைய இணை நோயுடையவா்கள் 8,949 பேருக்கும் என 19,292 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இவா்களில் 2 ஆவது தவணையாக சுகாதாரப் பணியாளா்கள் 506 பேருக்கும், முன்களப் பணியாளா்கள் 275 பேருக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட 149 பேருக்கும், இணை நோய் உள்ள 45 வயதுக்கு மேலானவா்கள் 124 பேருக்கும் என 1,054 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கரோனா தொற்றை கண்டறியும் பணி தீவிரமாக நடந்துவரும் வேளையில், அனைத்து மையங்களிலும் வரையறுக்கப்பட்டவா்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியும் நடைபெற்றுவருகிறது. பொதுமக்கள் இதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com