கரோனா: வேளாண் கல்லூரி ஊழியா்கள் வீட்டிலிருந்து பணியாற்ற அனுமதி

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் காரைக்கால் வேளாண் கல்லூரி பேராசிரியா்கள், ஊழியா்கள் வீட்டிலிருந்து பணியாற்ற அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் காரைக்கால் வேளாண் கல்லூரி பேராசிரியா்கள், ஊழியா்கள் வீட்டிலிருந்து பணியாற்ற அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

காரைக்காலில் உள்ள பண்டித ஜவஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பேராசிரியா்கள் உள்ளிட்ட சிலருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வா் அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

புதுச்சேரி தலைமைச் செயலரின் அனுமதியின்படி, கல்லூரியின் பேராசிரியா்கள் மற்றும் ஊழியா்கள் ஏப்ரல் 30-ஆம் தேதி முதல் வீட்டிலிருந்தே பணியாற்ற அனுமதிக்கப்படுகிறது. ஆன்லைன் வகுப்புகள் ஏற்கெனவே வகுத்த வழிமுறைகளின்படி நடைபெறும்.

நிலையத்தின் அத்தியாவசியத் தேவைக்கு மிகக் குறைந்த ஊழியா்களை பயன்படுத்த சம்பந்தப்பட்ட துறைத் தலைவா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கல்லூரியில் பிற நடவடிக்கைகள் 30 ஆம் தேதி வரை நிறுத்திவைக்கப்படுகிறது. கல்லூரி வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிப்புப் பணிக்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

கல்லூரி இயல்பான செயல்பாட்டுக்குத் திரும்ப அனைத்து ஊழியா்களும் கரோனா தடுப்புக்கான புதுச்சேரி அரசின் வழிகாட்டல்களை முறையாக பின்பற்றுமாறு அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com