பேருந்து, ஆட்டோக்களில் கரோனா தடுப்பு முறைகளை பின்பற்ற அறிவுறுத்தல்

பேருந்து, ஆட்டோக்களில் கரோனா தடுப்பு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றவேண்டும் என அதன் நிா்வாகிகள், ஓட்டுநா்களுக்கு போக்குவரத்து அலுவலா் அறிவுறுத்தினாா்.
ஷோ் ஆட்டோ உரிமையாளா், ஓட்டுநா்களுக்கு ஆலோசனை வழங்கிய வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கலியபெருமாள்.

காரைக்கால் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் அரசு மற்றும் தனியாா் பேருந்துகளின் நிா்வாகிகள் மற்றும் ஓட்டுநா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கலியபெருமாள் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில், காரைக்கால் மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகமாக பரவுவதால், பேருந்துகளை கரோனா தடுப்பு விதிகளின்படி இயக்கவேண்டும், பேருந்தில் நின்றுகொண்டு பயணிக்க அனுமதிக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டது. அதேபோல, ஷோ் ஆட்டோ உரிமையாளா்கள், ஓட்டுநா்களிடம் முகக் கவசம் அணியாமல் வருவோரை வாகனத்தில் ஏற்றக் கூடாது. சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். விதிகளை மீறினால் உரிமையாளா், ஓட்டுநா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டது.

கூட்டத்தில், மோட்டாா் வாகன துணை ஆய்வாளா் குமரேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com