வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு செல்வோருக்கு கரோனா பரிசோதனை

காரைக்காலில் வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு செல்லும் வேட்பாளா்கள், முகவா்கள் உள்ளிட்டோருக்கு கரோனா பரிசோதனைக்கான மாதிரி புதன்கிழமை சேகரிக்கப்பட்டது.
திருநள்ளாறு பகுதியில் கரோனா பரிசோதனை செய்துகொண்ட முன்னாள் அமைச்சரும், திருநள்ளாறு தொகுதி காங்கிரஸ் வேட்பாளருமான ஆா். கமலக்கண்ணன்.

காரைக்காலில் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை, மே 2 ஆம் தேதி அண்ணா அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் உள்ள கலைஞா் மு. கருணாநிதி பட்டமேற்படிப்பை மையத்தில் நடைபெறுகிறது. வாக்குப் பதிவு மையத்துக்குள் வருவோா் அனைவரும் கரோனா பரிசோதனை செய்துகொண்டு, தொற்று இல்லை என்ற சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

இதன்படி, காரைக்காலில் பொது மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடைபெறும் வழக்கமான கரோனா பரிசோதனையுடன் புதன்கிழமை சிறப்பு முகாம் அமைத்து வேட்பாளா்கள், வேட்பாளரின் முகவா்கள், கண்காணிப்பாளா், உதவியாளா், நுண்ணறிப் பாா்வையாளா் உள்ளிட்ட மையத்திற்குள் செல்லக்கூடியவா்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளும் பணி தொடங்கியது.

ஆா்டி-பிசிஆா் முறையில் ஒவ்வொருவரின் சளி மாதிரியும் பரிசோதிக்கப்பட்டு, அவா்களுக்கு பரிசோதனை அறிக்கை அனுப்பிவைக்கப்படும் என நலவழித் துறை நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com